திருமாவளவன்.. உங்கள் சமூகத்திலிருந்து யாராவது திமுக தலைவர் பதவிக்கு வர முடியுமா.? புரட்டி எடுத்த ராதாரவி.

By Ezhilarasan BabuFirst Published Jan 12, 2022, 4:13 PM IST
Highlights

சகோதரர் திருமாவளவனின் சமூகத்தை சேர்ந்த யாராவது ஒருவர் திமுகவின் தலைவர் பதவிக்கு வர முடியுமா என ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடியின் வருகையின் போது துணிவிருந்தால் திருமாவளவா நீ பலூன் விட்டு பாருடா என ராதாரவி விசிக தலைவர் திருமாவளவனை ஒருமையில் பேசியிருந்த நிலையில் மீண்டும் அவரை வம்பு இருக்கும் வகையில் இவ்வாறு பேசியுள்ளார். 

சகோதரர் திருமாவளவனின் சமூகத்தை சேர்ந்த யாராவது ஒருவர் திமுகவின் தலைவர் பதவிக்கு வர முடியுமா என ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடியின் வருகையின் போது துணிவிருந்தால் திருமாவளவா நீ பலூன் விட்டு பாருடா என ராதாரவி விசிக தலைவர் திருமாவளவனை ஒருமையில் பேசியிருந்த நிலையில் மீண்டும் அவரை வம்பு இருக்கும் வகையில் இவ்வாறு பேசியுள்ளார். 

கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற கோஷத்துடன் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் காலூன்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது பாஜக. கழகங்கள் இல்லாத தமிழகம் என்று  நரம்பு புடைக்க பேசினாலும், அதிமுக என்ற கழக்கத்துடன் கை கோர்த்துதான் இன்னும் தேர்தலை சந்திக்கும் நிலையில் பாஜக உள்ளது. ஆனால் மற்றொரு கழக்கமான திமுகவை சித்தாந்த ரீதியாக எதிரியாகவே பாவித்து அரசியல் செய்து வருகிறது பாஜக. இந்து மக்களுக்கு எதிரான கட்சி திமுக, தீயசக்தி திமுக என தொடர்ந்து பேசி வரும் பாஜக மற்றும் அதன் தலைவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினையும், அவரது குடும்பத்தினரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் அளவிற்கு எதிர்ப்பு காண்பித்து வருகின்றனர். சமீபகாலமாக அக்காட்சியை சேர்ந்த தலைவர்கள் மேடைகளில் திமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தாக்கியும் விமர்சித்தும் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாஜகவின் பொதுக்கூட்ட மேடையில் பேசிய அக்காட்சியை சேர்ந்த  நடிகர் ராதாரவி, திமுக கூட்டணி கட்சி தலைவர்களின் ஒருவரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை, திருமாவளவா மோடி வரும் பொழுது முடிந்தால் நீ ஒரு பலூன் விட்டு பார், ஆம்பளையாக இருந்தால் விடுடா என ஒருமையில் பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்குள் மீண்டும் திருமாவளவனை சீண்டும் வகையில் ராதாரவி பேசியுள்ளார். 

சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் குப்பத்தில் பிஜேபி சார்பில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் பொங்கல் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிஜேபி துணைத் தலைவர் வி.பி துரைசாமி, நடிகர் ராதாரவி, கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய ராதாரவி, இதுவரை பிஜேபி தலைவர்களாக யாராவது பிராமணர்கள் இருந்துள்ளார்களா என்றும், இதே நேரத்தில் சகோதரர் திருமாவளவனுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம், தவறாக அல்ல அவரது சமூகத்தில் இருந்து யாராவது திமுக தலைவராக முடியுமா?

ஆனால் திருமாவளவன் தொடர்ந்து பாஜகவையும், பிராமணர்களையும் குறிவைத்து பேசிவருவது சரிதானா?  பிரச்சாரத்தின்போது ஒரு செங்கல்லை காட்டி இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்றார்கள். ஆனால் மோடி அவர்கள் தற்போது 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க உள்ளார். இதுவரை யாராவது பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியுமா? மழை வெள்ளத்தை வெளியேற்ற தான் முயற்சி செய்தார்களே தவிர மக்கள் வாழ்வதற்காக திமுக ஒன்றும் செய்யவில்லை. இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்த திமுகவால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை, நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் அதற்கு பாஜக தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்றார். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உங்கள் சமூகத்தில் சேர்ந்த ஒருவர் திமுகவின் தலைவர் பதவிக்கு வர முடியுமா என ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளது கவனிக்க தக்க ஒன்றாக மாறியுள்ளது. திருமாவளவன் அவர்கள், திமுகவை காட்டிலும் கொள்கை ரீதியாக பாஜகவை எதிர்ப்பதில் முன்னணியில் இருந்து செயல்பட்டு வருகிறார்கள்.

அவரது பேச்சுக்கள் ஒவ்வொன்றும் சித்தாந்த ரீதியாகவும், பாஜகவின் மதவாத அரசியலை நேரடியாக தாக்கும் வகையில் இருந்து வருகிறது. இந்துக்கள் என்ற போர்வையில் மக்களை சிறுபான்மையினர்களுக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது என்றும், நாட்டிலேயே இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது பாஜக தான் என்றும், இன்னொரு முறை மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தால், இந்த தேசத்தை ஆண்டவனால் கூட  காப்பாற்றவே முடியாது என்றும் மேடைதோறும் திருமாவளவன் முழங்கி வரும் நிலையில், தற்போது பாஜக தலைவர்களும் திருமாவளவனை குறிவைத்து பேசத் தொடங்கியுள்ளனர் என்பதை ராதாரவியின் பேச்சின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.   
 

click me!