தமிழகத்தில் 3 அமைச்சர்களின் நிர்வாகம் மாற்றியமைப்பு... தமிழக அரசு அதிரடி..!

By Thiraviaraj RMFirst Published Jan 12, 2022, 4:03 PM IST
Highlights

சில மாதங்களில் அமைச்சரவை மாறியமைக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது 3 அமைச்சர்களிடம் இருந்த நிர்வாகங்கள் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை தவிர 33 அமைச்சர்கள் உள்ளனர். இன்னும் சில மாதங்களில் அமைச்சரவை மாறியமைக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது 3 அமைச்சர்களிடம் இருந்த நிர்வாகங்கள் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3 அமைச்சர்களின் நிர்வாகம்  மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இருந்த சர்க்கரை ஆலைகள் துறை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதேபோல், போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் இருந்த விமான போக்குவரத்து, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் இருந்த அயலக பணியாளர் கழகம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் வசம் சென்றிருக்கிறது. 

தங்கம் தென்னரசுவிடம், தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாட்டுத்துறை, தொல்பொருள் ஆகியவை உள்ளன.  வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திடம், வேளாண்மை வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக்கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத்தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு, தரிசு நில மேம்பாடு ஆகிய துறைகள் உள்ளன.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்   செஞ்சி கே. எஸ். மஸ்தானிடம், சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள், வக்பு வாரியம் உள்ளன. தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வே. கணேசனிடம்,  தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு ஆகியவை உள்ளன.
 

click me!