சித்தார்த்துக்கு சிக்கல் .. மன்னிப்பு கேட்டும் பிரயோஜனம் இல்ல.. சட்ட வல்லுனர்களை அணுகியது சைபர் கிரைம்..

By Ezhilarasan BabuFirst Published Jan 12, 2022, 2:25 PM IST
Highlights

இதேநேரத்தில் பல பிரபலங்களும் சாய்னா நேவாலுக்கு ஆதரவாகவும் சித்தார்த்துக்கு எதிர்ப்பாகவும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சித்தார்த் சாய்னா அவரிடம் மன்னிப்பு கோரி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், டியர் சாய்னா... 

தேசிய மகளிர் ஆணையத்தின் அழுத்தத்தின் காரணமாக நடிகர் சித்தார்த்தின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் சட்ட வல்லுனர்களின் ஆலோசனையை கேட்டு வருவதாகவும், விரைவில் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் நடிகர்களிலேயே சமூகப் பிரச்சினைகள் குறித்து அதிக ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் சித்தார்த். நீட் தேர்வு, இட ஒதிக்கீடு, விவசாயிகள் போராட்டம் என அனைத்திலும் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் அவர். அவரின் ஒவ்வொரு கருத்துக்கும் எந்த அளவிற்கு ஆதரவு இருக்கிறதோ, அந்த அளவிற்கு எதிர்ப்புக் குரலும் எழுவதை வழக்கமாக உள்ளது. சில நேரங்களில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வது சித்தார்த்தின் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் இந்திய விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் இட்ட பதிவுக்கு சித்தார்த் செய்த பதில் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை குறிப்பிட்டு ஜனவரி 5 ஆம் தேதி அன்று பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஒரு டுவிட் போட்டிருந்தார். அதில் ஒரு  நாட்டில் பிரதமருக்கு பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு பாதுகாப்பாக இருப்பதாக கூறமுடியாது. பஞ்சாப்பில் ஏற்பட்ட சம்பவத்தை கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கிறேன், பிரதமர் மோடி மீது அராஜக வாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் இது என கடுமையாக சாடினார். சாய்னாவின் இந்த வீட்டுக்கு நடிகர் சித்தார்த் போட்ட பதில் ட்வீட் மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அந்த ட்வீட்டில் அவர் குறிப்பிட்டிருந்த வார்த்தைகள் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தம் கொண்டதாக இருப்பதாகவும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த இந்திய மகளிர் ஆணையம் பரிந்துரை அளித்து இருந்தது. மேலும் சித்தார்த் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என இந்திய மகளிர் ஆணையத்தின் தலைவர் பிரகாஷ் சர்மா தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஒரு கடிதம் எழுதியிருந்தார். குறிப்பாக தேசிய மகளிர் ஆணையத்தின் கடிதத்தில் பெண்களை அவமானப்படுத்தும் வகையிலான நடிகர் சித்தார்த்தின் வெறுப்புணர்ச்சி பதிவுக்கு அவர் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 354 ஏ மற்றும் ஐ.டி சட்டப் பிரிவு 67- ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நடிகர் சித்தார்த் விவகாரம் தொடர்பாக சென்னை காவல்துறை விசாரணை நடத்த தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். 

இதேநேரத்தில் பல பிரபலங்களும் சாய்னா நேவாலுக்கு ஆதரவாகவும் சித்தார்த்துக்கு எதிர்ப்பாகவும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சித்தார்த் சாய்னா அவரிடம் மன்னிப்பு கோரி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், டியர் சாய்னா... கடந்த சில நாட்களுக்கு முன்பு உங்கள் டுவிட் ஒன்றுக்கு மூர்க்கத்தனமான ஜோக்குடன் பதில் அளித்தமைக்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார் இந்நிலையில்தான் நடிகர் சித்தார்த்தின் சர்ச்சை டுவிட் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அதாவது சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ள நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் இவ்விவகாரத்தில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முதற்கட்டமாக சட்ட ஆலோசனை பெற சட்ட வல்லுனர்களை அணுகியுள்ளனர். மேலும், நடிகர் சித்தார்த்-ன் பதிவினை வைத்து தேசிய மகளிர் ஆணையம் குறிப்பிட்டுள்ள சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கும் பட்சத்தில் நடிகர் சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!