கொரோனா 3வது அலை எந்த மாத்தில் உச்சம் அடையும் தெரியுமா? பிரதமர் அலுவலகத்திற்கு வந்த எச்சரிக்கை..!

By vinoth kumarFirst Published Aug 23, 2021, 2:10 PM IST
Highlights

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. 

கொரோனா 3வது அலை அக்டோபர் மாதத்தில் உச்சக்கட்டத்தில் இருக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகத்தில் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் பிரதமர் அலுவலகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. தற்போது பல இடங்களில் உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இது அதி தீவிரமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி 25,072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 3ஆம் அலையை எதிர்கொள்ள மத்திய – மாநில அரசுகள் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தயாராகி வருகின்றன. அதேபோல கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அக்டோபர் மாத இறுதியில் கொரோனா 3வது அலை தீவிரமடைவதை தவிர்க்க முடியாது என்று தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தின் நிபுணர் குழு எச்சரித்துள்ளது. பெரியவர்களை போன்றே குழந்தைகளுக்கும் அதிக அளவு பாதிப்பு ஏற்படும் என்பதால் மருத்துவ முன்னெச்சரிக்கை தேவை என்றும் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

ஒன்றிய உள்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர் குழு சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று கூறியுள்ளது. மருத்துவமனைகளில் குழந்தைகள் சிகிச்சை பெறும் வகையில் சிறப்பு வார்டுகளை அமைக்க வேண்டும். வென்டிலேட்டர், ஆம்புலன்ஸ் வசதிகளை போதிய அளவு வைத்திருக்க வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கியுள்ளது.  குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் அவர்கள் மூலம் எளிதில் பரவும் அபாயம் இருப்பதாகவும் பேரிடர் மேலாண்மை குழு எச்சரித்துள்ளது. 

click me!