அண்ணாமலையிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த சீனியர் லீடர்.. அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Aug 23, 2021, 1:51 PM IST
Highlights

அதே போல் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களுக்கு ஆளுநர் பதிவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராகவும் புதுச்சேரி மாநில பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவில் இருந்து அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக இன்று அவர் முறைப்படி தமிழக பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலையிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் அண்ணாமலையிடம் அந்த கடிதத்தை வழங்கினார்.

தமிழகத்தில் கால் பதிக்கும் நோக்கில் பாஜக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு 4 சட்டமன்ற உறுப்பினர்களுடம் தமிழக பாஜக சட்ட மன்றத்திற்குள் நுழைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மூத்த தலைவர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி வருவதுடன், இளைஞர்களை பெருமளவில் ஈர்க்கும் நோக்கில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலையை தமிழக பாஜக மாநில தலைவராக நியமித்துள்ளது. 

அதே போல் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களுக்கு ஆளுநர் பதிவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராகவும் புதுச்சேரி மாநில பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில்  தமிழக பாஜக தலைவராக, பாஜகவின் தேசியத் துணைத் தலைவராக, ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்த இல. கணேசனை மேகாலயா ஆளுநராக நியமித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஆளுநராக பதவியேற்கவுள்ள இல.கணேசன் தமிழக பாஜகவில் உள்ள அனைத்து கட்சி பொறுப்புகளையும் ராஜினாமா செய்துள்ளார். 

இன்று கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை அவர்களை நேரில் சந்தித்த இல.கணேசன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக ராஜினாமா கடிதத்தை வழங்கினார் அதற்கான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 
 

click me!