இது தான் ஊழலை ஒழிக்கிற லட்சணமா? திமுகவை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் சி.வி. சண்முகம்..!

By vinoth kumarFirst Published Oct 17, 2020, 3:39 PM IST
Highlights

அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகே தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகே தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 49-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு, மாநில சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்;- நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். 

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5% இடமளிக்க வேண்டும் என்பதை  ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் திமுக எம்.பி. பொன்.கவுதம சிகாமணியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் இவர்கள் தான் ஊழலை ஒழிக்கப் போவதாக சொல்கிறார்கள் என அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார்.

click me!