எல்லை மீறி ஆட்டம் போட்டால் அரசு வேடிக்கை பார்க்காது.. சூரப்பாவால் சூடான அமைச்சர் கே.பி.அன்பழகன்..!

By vinoth kumarFirst Published Oct 17, 2020, 3:09 PM IST
Highlights

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

அதிமுக 49ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தருமபுரியில் மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது, வெளிமாநில மாணவர்கள் அதிகமாக சேர்ந்து விடுவதற்கும், கட்டணம் உயர்வுக்கும், 69 சதவீத இட ஒதுக்கீடு பாதிக்கப்படுவதற்கும் வழிவகுத்துவிடும் என்றார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது. துணைவேந்தர் என்பவர் 3 ஆண்டுகால பணிக்காலத்தில் சுதந்திரமாக செயல்படலாம். அதற்கு தடையில்லை. ஆனால், துணைவேந்தர் என்பவர் விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என கூறியுள்ளார். 

மேலும், துணை வேந்தர் சுரப்பாவை சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்ற தமிழக பாஜக தலைவர் முருகன் புகாருக்கு பதில் அளித்த அமைச்சர் கே.பி.அன்பழகன் துணைவேந்தர் என்பவர் விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்றார்.

click me!