"பஸ் ஸ்டிரைக்குக்கும், தெர்மாகோலுக்கும் என்னாண்ணே சம்பந்தம்?" - செல்லூராரை உலுக்கும் மனசாட்சி

 
Published : May 15, 2017, 04:25 PM ISTUpdated : Sep 19, 2018, 12:36 AM IST
"பஸ் ஸ்டிரைக்குக்கும், தெர்மாகோலுக்கும் என்னாண்ணே சம்பந்தம்?" - செல்லூராரை உலுக்கும் மனசாட்சி

சுருக்கம்

thermocol protest against admk minister sellur raju

மின்னாடியெல்லாம் கூகுள்ள  ‘மதுரை’ன்னு டைப் பண்ணினா மீனாட்சி கோயில், ஜிகர்தண்டா, மல்லி, இட்லி, சட்னின்னு வந்து விழும். ஆனா இப்போ டைப் பண்ணினா தெர்மாகோல் வந்து விழுது, அதுக்குப் பக்கத்துல அண்ணன் செல்லூர் ராஜூ அநாயசமா சிரிச்சுட்டு இருக்கிறாரு. 

யண்ணே செல்லூர் ராசு! சர்வ தேச அளவுல தமிழன சந்தி சிரிக்க வெச்சுப்புட்டீகளே. ஒரு திட்டம் ஃபிளாப் ஆனதும் வழக்கமா பண்ற மாதிரி அந்த ஆகாவலி ஐடியாவ கொடுத்ததா சொல்லி அரசு ஊழியர் ஒருத்தருக்கு ஆப்பு அடிச்சுவிட்டுட்டீங்க.

இது மூலமா விமர்சனத்துல இருந்து நீங்க தப்பிச்சுட்டதா நினைக்காதீக. வெளியில கூட தப்பிச்சுக்கலாம்ணே ஆனா உங்களுக்குள்ளே மனசாட்சின்னு ஒண்ணு இருந்தா அது போட்டு பிறாண்டி எடுக்கும் பாருங்க, அதுக்கு என்னத்த பண்ணபோறீக?

இம்புட்டு நடந்து சீனா பத்திரிக்கைக்காரன் கூட கட்டம் போட்டு உங்கள காலி பண்ணின பிறகும் இப்பவும் நீங்க பண்ணுன இந்த கூத்தை பத்தி கொஞ்சங்கூட கவலைப்படாம பேட்டி கொடுக்குறீக பாருங்க, அதுதாம்ணே தாங்கிக்க முடியல. யண்ணே நம்ம பாண்டி கோயில்ல ஆடு வெட்றப்ப பார்த்திருக்கேம், வெட்டப்படபோறோமுன்னு தெரிஞ்சதும் அந்த ஆடு கெழக்கேயும் மேக்கேயுமா பாஞ்சு தப்பிக்க நினைக்கும்.

மஞ்ச தண்ணிய பல முறை தெளிச்சும் கழுத்தை ஆடாம அசைக்காம வெச்சு ‘சாமி உத்தரவு கொடுக்கலப்பே! இன்னொருவாட்டி வெட்டிக்குவோம்.’ அப்படின்னு பெருசு யாரையாச்சும் பேச வெச்சு அப்போதைக்கு தப்பிச்சுக்கும்.

ஆடுக்கு ஆறறிவாண்ணே இருக்குது, இதையெல்லாம் திட்டம் போட்டு பண்ணுறதுக்கு, அதோட உள்ளுணர்வு பண்ற வேலைண்ணே இது. 

ஆடுக்கே இம்புட்டு அறிவுண்ணா மனுஷ பயக நாம எம்புட்டு சூதானமா இருக்கணும்ணே. ஆனா அந்த அதிகாரி சொன்னாருன்னு சொல்லிப்புட்டு வேட்டிய மடிச்சுக்கட்டிட்டு வெள்ளத்துல எறங்குனீகளே, உங்களயெல்லாம் என்னாம்ணே பண்றது! 

இந்த தெர்மாகோல் சமாசாரம் உங்க அரசியல் வாழ்க்கையில குத்தப்பட்ட பச்சைண்ணே. எம்புட்டு நீங்க சமாதானம் சொல்லி, எத்தன சீன்போட்டாலும் சரியாவாது. 

‘மதுரக்காரண்டியேய்’ அப்படின்னு இந்த மண்ணுக்கு பெருமை தேடித்தந்த ஆளுவ எத்தனையோ பேரு இருக்காவ. அந்த காலத்து பாண்டிய மன்னல ஆரம்பிச்சு வாஜ்பாயையே கால்ல விழ வெச்ச சின்னப்பொண்ணு வரைக்கும் நம்மூரை தலை நிமிர வெச்ச மனுஷங்க. ஆனா நீ இப்படி பண்ணிப்புட்டியே. இனி நீயே மறந்தாலும் நம்மாளுக மறக்க விடமாட்டய்ங்க. 

இப்ப கூட பாரு மதுரையில போக்குவரத்து தொழிலாளருங்க ஸ்டிரைக்குல தெர்மாக்கோலை வெச்சு உனக்கெதிரா போராட்டம் பண்ணியிருக்காய்ங்க. போக்குவரத்து ஸ்டிரைக்குக்கும், தெர்மாகோலுக்கும் என்னாண்ணே சம்பந்தம், ஆனாலும் உனக்கு வெக்கிறாங்க பாரு இக்கு. 

உன்ன கிண்டலடிச்சு போராட்டம் பண்ணுன ஆளுங்க மேலே நீ நடவடிக்கை கூட எடுத்துடலாம்ணே ஆனா நான் மின்னயே சொன்ன மாதிரி உனக்குள்ளே இருந்து அரிக்குற மனசாட்சிக்கு என்னாண்ணே பதில் சொல்லுவ?
அந்த மீனாட்சியம்மாளுக்கு தாம்ணே வெளிச்சம்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!