
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கோடை வெயில் உக்கிரம் காட்டி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வேகம் காட்டிய வெயில், தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தலைநகர் சென்னை முழுக்க முழுக்க அனல் காற்றால் சூழப்பட்டுள்ளது.
பருவமழை பொய்த்துப் போனதால் சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் வீராணம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய ஏரிகள், வறண்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. விருதுநகர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, நாமக்கல், திருச்சி மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் நேற்று முன்தினம் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்தச் சூழலில் தமிழகத்தில் தொடர்ந்து அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.