என் வீட்டில் எந்தவிதமான ரெய்டும் நடக்கவில்லை! வரி ஏய்ப்பு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்! செந்தில் பாலாஜி

By vinoth kumar  |  First Published May 26, 2023, 2:36 PM IST

ஐடி ரெய்டு நிறைவுற்ற உடன் முழு விவரங்களை தருகிறேன். வரி ஏய்ப்பு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். சட்டமன்ற தேர்தலுக்கு இறுதி கட்ட பிரசாரத்தின் போது இது போன்ற சோதனை நடைபெற்றது. 


எனது சகோதரர் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி அதிகாரிகள் உள்ளே சென்ற வீடியோ எனக்கு வந்துள்ளது. அதை பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- எனது சகோதரர், அவரது உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது. எனது இல்லத்தில் எந்தவிதமான வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை. இது போன்ற சோதனைகளை நாங்கள் எதிர்கொள்வது புதிதல்ல. வருமான வரித்துறை சோதனை நடைபெற்றாலும், எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். 

Latest Videos

இதையும் படிங்க;- அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் கார்த்தியேன் வீட்டிலும் ரெய்டு..! யார் இவர் தெரியுமா?

ஐடி ரெய்டு நிறைவுற்ற உடன் முழு விவரங்களை தருகிறேன். வரி ஏய்ப்பு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். சட்டமன்ற தேர்தலுக்கு இறுதி கட்ட பிரசாரத்தின் போது இது போன்ற சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறை கேட்கும் ஆவணங்கள் வழங்க தயாராக உள்ளோம். ஐடி ரெய்டுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க எனது சகோதரர் தயாராக உள்ளார். 

இதையும் படிங்க;-  சோதனைகளை பார்த்து திமுக என்றைக்குமே அஞ்சியது இல்லை.. இதை திசை திருப்பவே ரெய்டு.. ஆர்.எஸ்.பாரதி பகீர் தகவல்.!

எனது சகோதரர் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி அதிகாரிகள் உள்ளே சென்ற வீடியோ எனக்கு வந்துள்ளது. அதை பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும். எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்புத் தரப்படும். வருமான வரித்துறையினரின் சோதனையை நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக சோதனை நடக்கும் இடங்களில் கட்சியினர் இருக்க கூடாது. முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கட்சியினரிடம் தொலைபேசியில் அறிவுறுத்தியுள்ளேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

click me!