ஐடி அதிகாரிகளின் வாகனங்களை சேதப்படுத்திய திமுக குண்டர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள்.. பாஜக ஆவேசம்.!

By vinoth kumarFirst Published May 26, 2023, 2:12 PM IST
Highlights

கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்த வந்தனர். அப்போது,  சோதனைக்கு வந்த அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டனர். அத்துடன் அதிகாரிகளின் கார் கண்ணாடியையும் உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தூண்டுதலின் பேரில் வருமான வரித்துறையினரின் வாகனங்களை சேதப்படுத்தியதாக நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார். 

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் இல்லத்திலும், ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்தா இன்ஃப்ரா, செந்தில் கார்த்திகேயன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையானது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்த வந்தனர். அப்போது,  சோதனைக்கு வந்த அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டனர். அத்துடன் அதிகாரிகளின் கார் கண்ணாடியையும் உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது திமுக தொண்டர் ஒருவரை வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வருமான வரித்துறை வாகனங்களை சேதப்படுத்திய திமுக குண்டர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநிலத்துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் நடைபெறும் சோதனையின் போது வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்க முயற்சித்து, அவர்களின் வாகனங்களை சேதப்படுத்திய திமுக குண்டர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்.  செந்தில் பாலாஜியின் தூண்டுதலின் பேரில் தான் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கும் என்பதால் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

click me!