அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில், அவர்கள் வந்த வாகனம் தாக்கப்பட்டதையடுத்து எஸ்.பி,அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
வருமான வரி சோதனை
தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுவிலக்கு துறையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டதாக தொடர் புகார்கள் எழுந்தன வண்ணம் இருந்த நிலையில் தற்போது இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. கரூரில் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் சோதனை நடத்த வந்த அதிகாரிகளுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அதிகாரி திமுகவினரை தாக்கியதாக கூறப்படுகிறது.
எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம்
இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் கண்ணாடிகளை திமுகவினரால் உடைக்கப்பட்டது. மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதன் காரணமாக பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதால் .துணை மேயர் தாரணி சரவணன், காளியாபுரத்தில் பெரியசாமி, ராமகிருஷ்ணாபுரம் அசோக் உள்ளிட்ட 9 இடங்களில் சோதனையானது நிறுத்தப்பட்டது.மேலும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி வருமான வரித்துறை அதிகாரிகள் எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக சோதனையானது நிறுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து பலத்து பாதுகாப்போடு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளனர்.
இதையும் படியுங்கள்