சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய ஒரு அதிமுகவினர்கூட இல்லை... பாஜக பரபரப்பு விமர்சனம்..!

Published : Jan 25, 2022, 06:49 PM IST
சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய ஒரு அதிமுகவினர்கூட இல்லை... பாஜக பரபரப்பு விமர்சனம்..!

சுருக்கம்

அதிமுக எதிர்கட்சி இல்லை. எதிர்க்கட்சியாக இல்லாமலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே எனத் தெரிவித்து இருந்தார்.  

சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய ஒரு அதிமுகவினரைக்கூட பார்க்க முடியவில்ல்லை என சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பாக தெரிவித்துள்ளார். அதிமுக எதிர்கட்சி இல்லை. எதிர்க்கட்சியாக இல்லாமலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே எனத் தெரிவித்து இருந்தார்.  

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ”திமுக ஆட்சி காலம் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது.  ஆனால், இந்த 4 ஆண்டு காலம் அவர்கள் ஆட்சி நீடிக்குமா என்று உறுதியாக சொல்ல முடியாது. இதற்கு பின்பு அவர்கள் ஆட்சி நீடிக்காது.

சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச கூடிய அதிமுகவை பார்க்க முடியவில்லை. 4 பேர் இருந்தாலும் சட்ட மன்றத்தில் மக்கள் பிரச்சனையை பாஜக தான் பேசுகிறது. அதிமுக எதிர்கட்சியாக இல்லை. எதிர்கட்சியாக இல்லாமல் இருந்தாலும், ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே” என அவர் தெரிவித்தார்.

 

நயினார் நாகேந்திரனின் இந்தப்பேச்சுக்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி