
அதிமுகவின் தாய் கழகமான எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகளின் பேச்சைக் கேளுங்கள் என்று அதன் செயலாளர் தமிழ்மகன் உசேன் பேசியுள்ளார். அவரது ந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில், மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடுவது குறித்து கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, பொன்னையன், நிர்வாகிகள் எம்.எல்ஏ., அலெக்சாண்டர், சுதா பரமசிவம், நீலாங்கரை முனுசாமி, ஜெ.எம்.பஷீர், பிஷப் நோபுள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் கலந்து கொண்டு பேசினார். எம்.ஜி.ஆர். மன்றம்தான் அதிமுகவின் தாய். எம்.ஜி.ஆர். மன்றத்தில் நான் உள்பட நிர்வாகிகள் செயல்பட்டபோது, அரசியலுக்கு வருவோம் என்பது எங்களுக்குத் தெரியாது. எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகளின் ஆலோசனையைக் கேட்டு கட்சியை வழி நடத்தினார் எம்.ஜி.ஆர்.
அதுபோலவே இப்போதைய நிர்வாகிகளும் எங்களுடைய ஆலோசனைகளைக் கேட்க வேண்டும். அம்மா பிறந்த நாளையொடி நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜெயலலிதா சிலை நிறுவ வேண்டும் என்று பேசினார். இதன் பிறகு வந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள், தமிழ்மகன் உசேன் பேச்சை ஆமோதிக்கும் வகையில் பேசினர்.
இந்த கூட்டத்தில், ஜெயலலிதாவின் வரலாற்றை துணைப்பாடமாக்க வேண்டும்; நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.