காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் பேசி எந்த பயனும் இல்லை என்பதால் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருவதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கருத்துக்களை பல்வேறு குற்றச்சாட்டுகளை, முன் வைத்தார் அதற்கு பதில் சொல்ல வேண்டியது நமது கடமை ஆகும்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்தாலும், பாஜகவை பாதுகாக்கும் பணி நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி பேசியது அபத்தமான ஒன்றாகும். கர்நாடகாவிடம் பேசி முடிவுக்கு வர முடியாததால் உச்ச நீதிமன்றம் சென்றோம். திமுக அரசுக்கு துணிச்சல் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
undefined
முதலமைச்சரை பார்த்து அவர் இவ்வாறு பேசுகிறார். ஒன்றிய பாஜகவுக்கு தான் காவிரி விவகாரத்தில் முழு பொறுப்பு உள்ளது என்பதை எடப்பாடி பழனிசாமி ஒத்துக் கொண்டுள்ளார். ஒன்றிய அரசை கண்டித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஒன்றிய அரசு வலியுறுத்தி தான் தீர்மானம் கொண்டு வந்தோம், 2018 பிறகு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தான் தண்ணீரை பெற்று தரும் உரிமை உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
காவிரி விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், கர்நாடகாவிடம் நாம் பேசி எந்த பயனும் இல்லை, அதனால் தான் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம்” என்று காவிரி விவகாரம் தொடர்பாக விளக்கமளித்தார். தொடர்ந்து பேசிய அவர், இஸ்லாமிய சிறைவாசிகளை பொறுத்தவரை எங்களுக்கு எந்த வேறுபாடும் கிடையாது,28 பேர் பட்டியலில் வைத்துள்ளோம், அதனை ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். ஆளுநர் நல்ல முடிவை அளிப்பார் என நம்புவோம் என்றும் கூறினார்.