கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை... அமைச்சர் ஜெயக்குமார்..!

By vinoth kumar  |  First Published Nov 8, 2020, 1:26 PM IST

சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெரும், அதனால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெரும், அதனால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

வீரமாமுனிவரின் 340வது பிறந்தநாளையொட்டி சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ளஅவரது சிலைக்கு தமிதுக அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின்ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Latest Videos

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் வீரமாமுனிவர் தேம்பாவணி என்கிற பக்தி இலக்கியத்தை எழுதியதுடன், சதுரகராதி என்கிற அகர முதலியைத் தொகத்துள்ளதையும் குறிப்பிட்டார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக இருக்குமிடம் வெற்றி பெறும். 2021ல் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெருபான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று கூறினார். அமெரிக்க துணை அதிகராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸூக்கு வாழ்த்துகள் என்றார். 

click me!