நேற்று இரவு 9.56 மணிக்கு அமெரிக்க மக்களுக்குத் தீபாவளி தொடங்கியது.. ப.சிதம்பரம் ட்வீட்..!

By vinoth kumarFirst Published Nov 8, 2020, 12:11 PM IST
Highlights

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை முன்வைத்து அந்நாட்டு மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியதாக மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை முன்வைத்து அந்நாட்டு மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியதாக மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனும் துணை அதிபராக தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸும் தேர்வாகி உள்ளனர். இந்நிலையில் இந்த தேர்தல் வெற்றி தொடர்பாக ப.சிதம்பரம் தமது டுவிட்டர் பதிவில்  கூறியதாவது:- அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது. ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த பிச்சையல்ல. மகாத்மா காந்தி தலைமையில் நாம் போராடி வென்றது. அந்த "வாராது போல் வந்த மாமணியை" ஒவ்வொரு நாளும் போராடிக் காப்பாற்ற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

click me!