திமுகவில் சரியான தலைமை இல்லை.. உதயநிதிதான் தலைவராக செயல்படுகிறார்.. கராத்தே தியாகராஜன் பகீர்..!!

Published : Dec 12, 2020, 05:04 PM IST
திமுகவில் சரியான தலைமை இல்லை.. உதயநிதிதான் தலைவராக செயல்படுகிறார்..  கராத்தே தியாகராஜன் பகீர்..!!

சுருக்கம்

இருந்தபோதும் முடிவை அவர் தான் எடுப்பார், பாஜகவின் ஆன்மீக அரசியல் வேறு ரஜினியின் ஆன்மீக அரசியல் வேறு என தெரிவித்தார், ரஜினி கூறிய ஆன்மீக அரசியல் என்பது நேர்மையானது என காந்தி கூறினார். 

திமுகவில் சரியான தலைமை இல்லை எனவும், உதயநிதி தான் தலைவராக செயல்படுகிறார், அவைத்தலைவர் போல் ஸ்டாலின் செயல்படு கிறார் எனவும் ரஜினி அரசியலுக்கு வந்த பிறகு திமுகவிற்கு தான் பாதிப்பு அதிகம் எனவும் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை திருவான்மியூரில் உள்ள காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அங்குள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், மதிய உணவினை வழங்கினார் மற்றும் இயக்குனர் சாய்ரமணி எழுதியுள்ள வா தலைவா என்ற பாடலை கராத்தே தியாகராஜன் வெளியிட்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன் கூறியதாவது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ரஜினியால்தான் ஏற்படும், எனக்கு வந்த தகவலின் அடிப்படையில் பாஜகவுடன் ரஜினி கூட்டணி வைக்க மாட்டார் என்ற அவர், தனியாக தான் போட்டியிடுவேன் என்று ரஜினி கூறியிருக்கிறார், அதே நிலைபாடு தான் தற்போது வரை உள்ளது என்றார்.இருந்தபோதும் முடிவை அவர் தான் எடுப்பார், பாஜகவின் ஆன்மீக அரசியல் வேறு ரஜினியின் ஆன்மீக அரசியல் வேறு என தெரிவித்தார், 

ரஜினி கூறிய ஆன்மீக அரசியல் என்பது நேர்மையானது என காந்தி கூறினார்.  பாஜக இந்துத்துவா அரசியல் செய்கிறது, ஆனால் ரஜினி இந்து கொள்கை மதசார்பற்ற அரசியலை தான் பின்பற்றுவார். ஆர்எஸ்எஸ் உடன் கருணாநிதி கூட்டணியில் இருக்கும் போது அது சமுதாய இயக்கம் என்று  கூறியிருக்கிறார், தமிழ்நாட்டில் இரண்டு திராவிட கட்சிகள் பாஜகவுடன் போட்டி போட்டுக்கொண்டு  கூட்டணி வைத்தார்கள் என்றார். மேலும், மோடி அமித்ஷா, சிதம்பரம், அம்பானி உள்ளிட்டோர் ரஜினிக்கு மிகப்பெரிய நண்பர்கள், எல்லா கட்சிகளுடனும் அவருக்கு தொடர்புள்ளது. நண்பர்கள் இருக்கிறார்கள் என்றார். பெண்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு கொண்டவர் ரஜினி, தமிழகத்தில் 65 சதவிகிதம் பேர் தான் வக்களிப்பார்கள் அதில் 40 சதவிகிதம் பேர் ரஜினிகாந்துக்கு தான் வாக்களிப்பார்கள் என கூறினார். 

ரஜினி கட்சி ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இன்னும் உங்களுக்கு பொறுப்பு வழங்கவில்லை ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பதவிக்காக நான் ரஜினியிடம் வரவில்லை, கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். படிக்கும் போதிருந்து நான் அவருக்கு ரசிகர் மன்றம் தொடங்கினேன் என்றார். தொடர்ந்து ரஜினி கட்சி ஆரம்பித்தால் யாருக்கு பாதிப்பு அதிகம் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ரஜினி அரசியலுக்கு வந்தால் திமுகவுக்கு தான் பாதிப்பு அதிகம் அவர்களுக்கு தான் ஓட்டு வங்கி குறையும் என்ற அவர், திமுகவில் சரியான தலைமை இல்லை உதயநிதி, துர்கா ஸ்டாலின் தான் தலைவர்களாக செயல்படுகிறார்கள், ஸ்டாலின் அவைத்தலைவர் போல்தான் செயல்பட்டு வருகிறார் என கூறினார். 
 

PREV
click me!

Recommended Stories

பாம்பும், கீரியுமாக ஆதவ் அர்ஜுனா vs புஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் அதிகார மோதல்.. விஜய்க்கு தலைவலி!
நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி.. உடல்நிலை எப்படி இருக்கு?