ரஜினி கட்சி ஆரம்பித்தால் பாதிப்பு அவருக்குத்தான்.. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கே வெற்றி. கி.வீரமணி.

Published : Dec 12, 2020, 04:47 PM IST
ரஜினி கட்சி ஆரம்பித்தால் பாதிப்பு அவருக்குத்தான்.. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கே வெற்றி. கி.வீரமணி.

சுருக்கம்

திராடவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி,  மருத்துவ கல்லூரி இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு நீக்க வேண்டும்,

திராடவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, மருத்துவ கல்லூரி இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு நீக்க வேண்டும், உயர்கல்விக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவி தொகையை ரத்து செய்தது கண்டனத்துக்குரியது, சாதி வாரி கணக்கெடுப்பு கட்டாயம் தேவை, தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும். 

மேலும், 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும், 7 தமிழர் விடுதலையை ஆளுநர் அலட்சியப்படுத்த கூடாது, 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற ஆயத்த பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் அவர் கொள்கையை சொல்லட்டும் என்ற அவர் ரஜினியின் அரசியல் வருகை ரஜினிக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். 

குழப்பமான எதிரிகள் பல வேடங்களில் வந்தார்கள், ஆனால் தற்போது அவர்கள் நமக்கெதிரானவர்கள் என்பது தெளிவாகி உள்ளது என்றார். எனவே திமுக வின் வெற்றி இதன் மூலம் இலகுவாகி இருக்கிறது. விவசாயிகளின் பிரச்சினைகளையும் போராட்டங்களையும் மத்திய அமைச்சர்கள் கொச்சை படுத்துகிறார்கள். விவசாயிகள் நலன் பாதுகாப்பதை பிரதமர் கருத்தில் கொள்ள வேண்டும். வரும் 14 ம் தேதி நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் ஆதரவு அளிக்கும் என்றார். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் கூறினார்.

 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி