சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்டதில் அரசியல் கிடையாது... அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிரடி..!

By vinoth kumarFirst Published Feb 11, 2021, 12:26 PM IST
Highlights

18 எம்எல்ஏக்களை தன்னோடு அழைத்து சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அதிமுகவில் இணைவது குறித்து பேசுவது வினோதமானது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். 

18 எம்எல்ஏக்களை தன்னோடு அழைத்து சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அதிமுகவில் இணைவது குறித்து பேசுவது வினோதமானது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். 

நாகை மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள யாத்ரீகர்கள் தங்கு விடுதிக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கல்லை நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்டதில் அரசியல் கிடையாது. சசிகலாவின் சொத்துகள் முடக்கப்படுவது நீதிமன்ற நடவடிக்கைக்கு கட்டுப்பட்டது. உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதால் அதிகாரிகள் பணிகளை செய்கின்றனர் என விளக்கமளித்துள்ளார். 

மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆட்சியை கவிழ்க்க சதி செய்தவர், இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்ற டிடிவி. தினகரன் அதிமுக இணைப்பு பற்றி பேசுவது வினோதமானது.

18 சட்டமன்ற உறுப்பினர்களை தன்னோடு அழைத்துச் சென்று அதிமுகவை ஆட்சியில் இருந்து இறக்குவதற்கு, இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி வேலை பார்த்தவர் டிடிவி தினகரன். அப்படிப்பட்ட தினகரனின் இன்றைய பேச்சுக்கள் விநோதமாக உள்ளது எனக் கூறினார்.

click me!