கிழக்கு லடாக்கில் இருந்து படைகளை பின்வாங்குகிறது சீனா.. ரஷ்யாவின் தலையீட்டால் முடிவு.

By Ezhilarasan BabuFirst Published Feb 11, 2021, 12:22 PM IST
Highlights

இதை உறுதி செய்யும் வகையில் சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கேனல் வு குவான், எழுத்துபூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, இந்திய சீன எல்லையான கிழக்கு லடாக் பகுதியில் பாங்காங் த்சோ ஏரி  ஒட்டியுள்ள வடக்கு தெற்கு கரையில் நிறுத்தப்பட்டுள்ள இருநாட்டு துருப்புகளும் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.  

கடந்த 9 மாதங்களுக்கு பிறகு  கிடைக்க லடாக் பகுதியில் பாங்கொங் த்சி ஏரியை ஒட்டி நிறுத்தப்பட்டுள்ள படைகளை இருநாடுகளும் பின்வாங்க ஒப்புக்கொண்டதாக சீன பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்திய-சீன ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்று வந்த இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் பங்கொங் த்சோ, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய சீன ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து எல்லையில் பதட்டம் அதிகரித்தது. அதைத்தொடர்ந்து இருநாடுகளும் இப்பகுதியில் ஏராளமான படைகளை குவித்தன. இரு நாட்டுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என்ற சூழல் நிலவி வந்தது. அதற்கிடையில் இந்திய மற்றும் சீன ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வந்தது. 8 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் 9வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில் இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளது, அதனடிப்படையில் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள போர் தளவாடங்கள் மற்றும் ராணுவத் துருப்புகளை பின்வாங்குவது என இரு நாடுகளும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதை உறுதி செய்யும் வகையில் சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கேனல் வு குவான், எழுத்துபூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, இந்திய சீன எல்லையான கிழக்கு லடாக் பகுதியில் பாங்காங் த்சோ ஏரி  ஒட்டியுள்ள வடக்கு தெற்கு கரையில் நிறுத்தப்பட்டுள்ள இருநாட்டு துருப்புகளும் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. அதன் ஆரம்பமாக தெற்கு கரையில் இருந்து டாங்கிகள் மற்றும் பீரங்கிகளை சீனா பின்வாங்கி வருகிறது. அதேபோல் இந்திய துருப்புகளின் பலமும் வெகுவாக குறைக்கப்பட உள்ளது. முதலில் ராணுவ தளவாடங்கள் வெளியேற்றப்படும், பின்னர் படைகள் மெல்ல மெல்ல  குறைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த  முத்தரப்பு பேச்சு வார்த்தையின் விளைவாகவும் சீனா படைகளை திரும்ப பெற முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் கிட்டத்தட்ட இந்திய ராணுவம் சுமார் 50,000 ராணுவ வீரர்களை நிறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சீன அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இந்திய தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.  ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுகுறித்து இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!