பேராசிரியர்களின் ஊதியத்தை குறைக்கும் திட்டம் இல்லை.. உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்.

By Ezhilarasan BabuFirst Published May 25, 2021, 9:24 AM IST
Highlights

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் தேர்வுகளை நடத்தி முடித்து ஜூலை 30ஆம் தேதிக்குள் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளதாக  பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக்கு பின் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  

கொரோனாவால் பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்துவது குறித்து உயர்க்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனும் ஆலோசனை நடத்தினார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணாபல்கலைக்கழக தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, 2017 ரெகுலேஷன்படி யூ.ஜி., பி.ஜி பட்டப்படிப்பு தேர்வுகள் வரும் ஜூன் 14ஆம் தேதி ஆன்லைன் தேர்வுகள் தொடங்கும். 

2013 ரெகுலேஷனில் எழுதிய யூ.ஜி மாணவர்கள் தேர்வும் ஜூன் 14ஆம் தேதி தொடங்கும், மற்ற ரெகுலேஷன் மாணவர்கள் தேர்வு ஜூன் 21ஆம் தொடங்குகிறது .ஏற்கனவே தேர்வெழுதிய மாணவர்கள் பணம் கட்ட தேவை இல்லை, பணம் கட்டாமல் இருந்த மாணவர்கள் இன்று முதல் 3 தேதிக்குள்  தேர்வு கட்டணத்தை செலுத்தி தேர்வில் கலந்து கொள்ளலாம். மற்ற பல்கலைக்கழகங்களில் ஜூன்15 தொடங்கி ஜூலை 15இல் முடித்து; ஜூலை 30ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை அறிவிக்க முடிவெடுத்துள்ளோம். பேராசிரியர்கள் ஊதியம் குறைக்கும் திட்டம் இல்லை. இவ்வாறு கூறினார். 

click me!