
அரசியல் ரீதியாக திமுகவையும் பாஜக ஆட்டுவிக்கும் என்றும் ஆட்சி ரீதியாக அல்ல என்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோவையில் பொன். ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அரசியல் ரீதியாக திமுகவையும் பாஜக ஆட்டுவிக்கும் என்றும், ஆட்சி ரீதியாக அல்ல என்றும் கூறினார். தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதால் அனைத்து கட்சிகளும் பாஜகவை இலக்காக வைத்து செயல்படுகின்றன.
கோடநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மரியாதைக்குரிய இடமான கோடநாடு சந்தேகத்திற்குரிய இடமாக மாறியுள்ளது. இது நல்லதல்ல என்றார். கோடநாடு விவகாரத்தில் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
தமிழக அரசை கலைக்க மத்திய அரசு தயாராக இல்லை என்றார். தமிழ்நாடு அமைதியான நிலையில் போக வேண்டும் என்று நினைக்கிறோம். தமிழகத்தில் தேடப்படக் கூடியவர்கள் இன்னும் உள்ளனர் என்று காவல் துறை கூறுகின்றது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் மீது சிறை, அபராதம் போன்றவற்றை பின்பற்றினால் இலங்கை மீனவர்களை நாமும் அதேபோல் தண்டிக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
நட்டு வளர வளர எல்லை உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும் என்றும் இந்தியா எந்த நாடடிற்கும் அடிபணியாது என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.