தமிழகத்தில் ஊரடங்குக்கான தேவை தற்போதைக்கு இல்லை.. அடுத்த இரண்டு வாரங்கள் மிக முக்கியமானது- ராதாகிருஷ்ணன்.

By Ezhilarasan BabuFirst Published Apr 14, 2021, 1:55 PM IST
Highlights

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் அதன் நேரடி காட்சிகளை தற்போது காணலாம்  அனைத்து மாநிலங்களிலும் இரண்டாம் அலை ஏறுமுகமாக இருக்கிறது. 

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் அதன் நேரடி காட்சிகளை தற்போது காணலாம் அனைத்து மாநிலங்களிலும் இரண்டாம் அலை ஏறுமுகமாக இருக்கிறது. போர் கால அடிப்படையில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானது. பொதுமக்களின் ஒத்துழைப்பு கட்டாயம் தேவை.

தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். மகாராஷ்டிராவில் போல் தமிழகத்தில் ஊரடங்குக்கான தேவை தற்போதைக்கு இல்லை.தடுப்பூசி போட்டு கொள்வதற்கு மக்கள் அண்மை காலமாக ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கின்றனர் தடுப்பூசி போட்டவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டாலும் அதன் வீரியம் குறைய வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 

அடுத்த இரண்டு வாரம் மக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அப்படி அணிவதன் மூலம்  நோய் தொற்றை கட்டுப்படுத்தலாம். ஊரடங்கு என்பது கொள்கை ரீதியிலான முடிவு அதை அரசு தீவிரமாக கவனித்து வருகிறது. ரஷியாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி கொள்முதல் செய்ய பட்டவுடன் தமிழகத்திற்கும் கொண்டு வர பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!