
காவிரி நதிநீர் இறுதி தீர்ப்பை நேற்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.அதில் தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வராததால் தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,நடிகர் ரஜினி காந்த் தமிழகத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதால் காவிரி நதிநீர் தீர்ப்பு குறித்த கருத்துக்கு பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்திற்கு ஆதரவாக பேசிய ரஜினி காந்த், உச்சநீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்றார். தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்
கிளம்பியது எதிர்ப்பு
ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து,ரஜினியின் உருவ பொம்மையை கன்னட அமைப்பினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
அதாவது தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி காவிரி நீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இது நடுவர் மன்றம் வழங்கிய அளவை விட 14.75 டிஎம்சி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது
அதேசமயம், கர்நாடக மாநிலத்திற்கு பாசனம் மற்றும் பெங்களூரு குடிநீர் தேவையை காரணம் காட்டி, 14.75 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக வழங்க உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த ரஜினி காந்த்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.