எனக்கு கோபம் வந்துச்சுன்ன சசிகலா குறித்த ரகசியங்களும் வெளில வரும்…. ஓபிஎஸ் ஜாலி பேச்சு…..

First Published Feb 17, 2018, 12:48 PM IST
Highlights
OPs speech at teni about sasikala family


கடந்த ஆண்டு தர்மயுத்தத்திற்காக ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த பிறகு சசிகலா குறித்த ரகசியங்களை 1 % தான் தெரிவித்தாகவும், தனக்கு கோபம் வரும் போதெல்லாம் தொடர்ந்து அவரது ரகசியங்களை வெளியிடுவேன் என்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய ஓபிஎஸ்இ ஜெலலிதா சமாதியில் உட்கார்ந்து தியானம் செய்தார். தான் ஒரு தர்மயுத்தம் தொடங்கிவிட்டதாகவும், அதிமுகவில் இருந்து சசிகலாவை விரட்டுவேன் என்றும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சசிகலா குறித்த  பல விஷயங்களை தெரிவித்தார். தற்போது சசிகலா குறித்து 1 சதவீதம் அளவுக்குத்தான் தான் கூறியுள்ளதாகவும், மீதம் உள்ள 99 சதவீதம் பின்னர் கூறிவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற மறைந்த  ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார். அப்போது, எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எந்த லட்சியத்தை முன்னிறுத்தி அதிமுக வை உருவாக்கிக் கட்டிக் காத்தார்களோ, அந்த லட்சியம் நிறைவேற வேண்டும் என்பதுதான் நான் தர்ம யுத்தத்தை தொடங்கியதன் முக்கிய காரணம் என கூறினார்.

அதிமுகவையும் ,  ஆட்சியையும் வலுப்படுத்த நானும், எடப்பாடி பழனிசாமியும் லட்சியப் பயணம் தொடங்கியுள்ளோம் என்று தெரிவித்த ஓபிஎஸ்,  கடந்த 1980-ஆம் ஆண்டில்  அதிமுக வில் வார்டு செயலராக தனது பணியை தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதிமுக தொடங்கியபோது கைப் பிள்ளையாக இருந்த டி.டி.வி.தினகரன், , தற்போது என்னை கட்சிக்கு அறிமுகப்படுத்தியதாக கூறிக் கொள்கிறார். மேலும் தன்னை மீண்டும் டீ கடையில் உட்கார வைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்லில் நிற்க தனக்கு சீட் கிடைக்காமல் போன நிலையில்  ஜெயலலிதா தன்னை அழைத்து சீட் கொடுத்தாக ஓபிஎஸ்  தெரிவித்தார். சசிகலாவுக்கு விசுவாசமாக இல்லாமல் ஜெயலலிதாவுக்கு விசுவாசமக இருந்ததால்தான் தனக்கு சசிகலா மிகுந்த தொந்தரவு கொடுத்தாகவும்  ஓபிஎஸ் கூறினார்

அதே நேரத்தில் பெரியகுளம் தொகுதியில் தன்னை தோற்கடிக்க சசிகலா குடும்பத்தினர் செய்த சதியையும் மீறி ஜெயலலிதாவால் வெற்றி பெற்றதாகவும் கூறினார். சசிகலா குடும்பத்தினரில் அவரைத் தவிர வேறு யாரையும் ஜெயலலிதா போயஸ் கார்டனுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

சசிகலாவை எதிரில் வைத்துக் கொண்டே நீங்கள் ஒருவர் மட்டுமாவது  விசுவாசமாக இருங்கள் என ஜெயலலிதா தெரிவித்ததை சுட்டிக்காட்டிய ஓபிஎஸ், டி.டி.வி.தினகரனுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என ஜெயலலிதா தன்னிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

ஏற்கனவே தாள் தர்மயுத்தம் தொடங்கியபோது சசிகலா குறித்த ரகசியங்களை 1 சதவீதம் மட்டுமே கூறியதாகவும் தனக்கு கோபம் வரும்போதெல்லாம் அவர் குறித்த ரகசியங்களை வெளியிடுவேன் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

click me!