
சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, காவல்துறையின் நடவடிக்கையில், அரசு தலையிடுவது இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
காவல்துறை, தீயணைப்பு துறை, மீட்பு பணித்துறை ஆகிய துறைகளின் மீது மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடந்தது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:-
திருடு போன சொத்துகளை மீட்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அரசின் சிறிய குறைகளை கூட பூதாகரமாக்கி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன.
தமிழகத்தில் மிக குறைவான அளவில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. காவல்துறையின் பணிகளில் அரசு தலையீடு இல்லை. 6 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் படிப்படியாக குறைந்துள்ளன. திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளன.
காவல்துறையினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து சட்டத்தின் ஆட்சியை காத்து வருகிறோம். 6 ஆண்டுகளில் அரசியல் தலையீடு இல்லாமல் காவல் துறை சுதந்திரமாக செயல்படுகிறது. இதனால், தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது
இவ்வாறு அவர் பேசினார்.