2 மாவட்டச் செயலாளர்கள் அதிமுகவுக்கு சென்றதால் அமமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அமமுகவில் இருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே அதிமுகவுக்கு சென்று உள்ளனர். சொந்த பிரச்சனைக்காக விழுப்புரம் முன்னாள் அமமுக மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் விலகியுள்ளார்.
சொந்த பிரச்சனைக்காக விழுப்புரம் முன்னாள் அமமுக மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் விலகியுள்ளார். இதனால் விலகி செல்லும் சிலரால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படாது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- 2 மாவட்டச் செயலாளர்கள் அதிமுகவுக்கு சென்றதால் அமமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அமமுகவில் இருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே அதிமுகவுக்கு சென்று உள்ளனர். சொந்த பிரச்சனைக்காக விழுப்புரம் முன்னாள் அமமுக மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் விலகியுள்ளார். இதனால் விலகி செல்லும் சிலரால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படாது. விலகி செல்பவர்களின் இடத்தை நிரப்ப தகுதியான பலர் உள்ளனர். இப்படி தகுதியான நபர்கள் எங்கள் கட்சியில் இருப்பதால் தான் எடப்பாடி பழனிசாமி ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.
இதையும் படிங்க;- அதிமுகவை ஒன்றிணைப்பது இருக்கட்டும்! முதல்ல அவங்க குடும்பம் ஒன்றிணையட்டும்! டிடிவி.யை விமர்சித்த பாலசுந்தரம்.!
அமமுகவினை பலப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளேன். மார்ச் 23ம் தேதி வரை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. 2 தேர்தல்களில் தோல்வி ஏற்பட்டாலும் தொண்டர்கள் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அமமுக தயாராக உள்ளது. அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரண்டால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்தலாம். சரியான கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சியை அமைப்போம். சின்னம் மட்டம் இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி நெல்லிக்காய் மூட்டை போல சிதறி போகும். அதிமுக தவறானவர்கள் கையில் உள்ளது.
எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக சின்னம் இருந்தாலும், எதிர்வரும் தேர்தலில் எந்த பலனும் அதிமுகவுக்கு இருக்காது. ஜெயலலிதாவின் ஆட்சியே அடுத்த முறை கொண்டுவரும் நம்பிக்கை உள்ள இயக்கம் அமமுக. எங்களது பலமும், உயரமும் எங்களுக்கு தெரியும். அதிமுகவை கைப்பற்றுவோம் என்று கூறிய தினகரன் தற்போது அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க போகிறாரே என்று சிலர் கேட்கிறார்கள். அதிமுக இன்று தவறானவர்கள் கையில் உள்ளது. பி.எஸ்.வீரப்பா கையிலும், எம்.என்.நம்பியார் கையிலும் புரட்சி தலைவரின் சின்னமும் கட்சியும் உள்ளது. எங்கள் இலக்கை அடையும் வரை நாங்கள் போராடுவோம். அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை என டிடிவி.தினரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- ஓஹோ இதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதா? வச்சு செய்யும் டிடிவி.தினகரன்.!
எங்களுடைய பலமும் உயரமும் எங்களுக்கு தெரியும். சில பேர் மாதிரி ஆணவத்தில், அகம்பாவத்தில், பணத்திமிரில் எங்களது நடவடிக்கைகள் இருக்காது. நாங்கள் வளர்ந்து வரும் ஒரு இயக்கம். இரு தேசிய கட்சியில் ஏதேனும் ஒரு கட்சியுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அந்த வாய்ப்பு ஏற்படாவிட்டால் தனித்து போட்டியிடுவோம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.