சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த இருவருக்கு BF7 Variant கொரோனாவா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்.!

By vinoth kumarFirst Published Dec 28, 2022, 11:05 AM IST
Highlights

சீனாவிலிருந்து மதுரைக்கு வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேரும் வீட்டில் ததனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். 

சீனாவிலிருந்து வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- சீனாவிலிருந்து மதுரைக்கு வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். எந்த வகை கொரோனா தொற்று என ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இன்னும் 4 நாட்களில் எந்த மாதிரியான வைரஸ் தொற்று என்பது தெரியவரும்.

தொற்றால் பாதிக்கப்பட்ட தாய், மகள் நலமுடன் உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினியை மக்கள் பயன்படுத்த வேண்டும்.

தியேட்டர்கள், திருமண நிகழ்வுகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணிவதன் மூலம் நம்மை மட்டுமல்லாமல் மற்றவர்களையும் பாதுகாத்திட வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

click me!