காங்கிரஸ் கூட்டணியில், கமல்ஹாசன் தலைமைியலான மக்கள் நீதி மய்யம் இடம் பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆரூடம் தெரிவித்துள்ளார்.
காங்கிஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஒற்றுமை இந்தியா என்ற நடைபயணத்தை மேற்கொண்டு 100 நாட்களை கடந்து பயணம் செய்து கொண்டு இருக்கிறார். ஒற்றுமை இந்தியா பயணம் 100 நாட்களைக் கடந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
புதுவையில் மாநில அந்தஸ்து கோரி இன்று முழு அடைப்பு போராட்டம்
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்மை காலமாக தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் குறித்தான செய்தி அதிகம் வருகின்றது. கஞ்சா நம் கலாசாலத்திற்கு புதிதானதல்ல. கஞ்சா பயன்படுத்துபவர்களை ஒரு நோயாளியை போன்று பார்க்க வேண்டும். கஞ்சா பயன்படுத்துபவர்களை காட்டிலும் அதனை தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் இடம்பெற பிரகாரசமான வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில், செங்கரும்பும் சேர்த்து வழங்கப்பட வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கியும், எந்தவித பணியும் மேற்கொண்டதாக தெரியவில்லை. ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் படித்துவிட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் படித்ததாக சான்றிதழ் வழங்கும் அவல நிலை தான் உள்ளது.
ராகுல் காந்தி மேற்கொள்ளும் ஒற்றுமை இந்தியா பயணம் டெல்லி சென்றடைய ஒரு நாள் முன்னதாக கொரோனா குறித்தான செய்தி வெளியிடப்படுகிறது. இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளாா்,