
அரசியலை விட்டு விலகினாலும், காங்கிரசை விட்டு விலக மாட்டேன் என்று காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு விலகப் போவதாகவும், ரஜினி அல்லது கமல் ஆரம்பிக்கும் கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த செய்திக்கு குஷ்பு மறுப்பு தெரிவித்துள்ளார்.
நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகப் போவதாக வந்துள்ள தகவல் பொய்யானது என்றார். வேலை வெட்டி இல்லாமல் இருந்தால் சாத்தான் எதையாவது செய்யும் என்பார்கள். அதே போலத்தான் வேலை வெட்டி இல்லாதவர்கள் இந்த வசந்தியை பரப்பி உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
காங்கிரசுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்களின் பொய்யான பிரசார இது. காங்கிரசில் இருந்து நான் விலகுவேன் என்ற பேச்சுக்கு வாய்ப்பே இல்லை என்றார்.
அரசியலை விட்டு விலகினாலும், காங்கிரசை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன். வேறு எந்த கட்சிக்கும் செல்லவும் மாட்டேன்.
சம்பந்தமே இல்லாமல் இப்படி ஒரு செய்தியை பரப்பி விட்டிருப்பதைப் பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்தது என்று குஷ்பு கூறினார்.