3வது அலை இல்லை, எத்தனை அலை வந்தாலும் தமிழகம் சமாளிக்கும்.. தயார் நிலையில் 12,458 ஆக்சிஜன் செறிவூட்டிகள்.

Published : Jul 06, 2021, 10:32 AM IST
3வது அலை இல்லை, எத்தனை அலை வந்தாலும் தமிழகம் சமாளிக்கும்.. தயார் நிலையில் 12,458 ஆக்சிஜன் செறிவூட்டிகள்.

சுருக்கம்

தமிழகத்தில் கொரொனா பாதிப்பின் இரண்டாம் அலை படிபடியாக குறைந்து வரும் நிலையில், மொத்தம் 12,458 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தற்போது தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.    

தமிழகத்தில் கொரொனா பாதிப்பின் இரண்டாம் அலை படிபடியாக குறைந்து வரும் நிலையில், மொத்தம் 12,458 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தற்போது தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் 2வது கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் அதிகரித்து கொண்டே இருந்தது. குறிப்பாக மே மாதத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை உச்சத்தை அடைந்தது. இந்த காலக்கட்டத்தில் ஆக்சிஜன் படுக்கைகளின் தேவை அதிகரித்து கொண்டே இருந்தது. எனவே தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பணியை தமிழக அரசு போர்கால அடிப்படையில் மேற்கொண்டது. 

மேலும், பல்வேறு தரப்பினர் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்கினார். இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனைத்தும் அரசு மருத்துவமனைகள், புதிதாக உருவாக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்களுக்கு வழங்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்படி கடந்த 7ம் தேதி திமுக ஆட்சி அமைந்த பிறகு அரசு மருத்துவமனைகளுக்கு 7400 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 7ம் தேதிக்கு முன்பாக தமிழகத்தில் அரசு மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களில் 2268, தனியார் மையங்களில் 1106 என்று மொத்தம் 3374 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இருந்தது. 

இந்நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி நிலவரப்படி அரசு மையங்களில் 9731 செறிவூட்டிகளும், தனியார் மையங்களில் 2727 என்று மொத்தம் 12,458 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தமிழகத்தில் உள்ளது. இதில் மே 7 தேதிக்கு பிறகு அரசு மருத்துமனைகளுக்கு 7463 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதைப்போன்று தனியார் மருத்துவமனைகளில் 1621 செறிவூட்டிகள் கூடுதலாக வாங்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 2610 செறிவூட்டிகள் உள்ளது. சென்னையில் மொத்தம் 604 செறிவூட்டிகள் உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!