
பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்களுடன் தமிழக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதிருப்தி காரணமாக ஒரு எம்.எல்.ஏ எடப்பாடி அணிக்கு மாறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரிந்து இருந்த அதிமுகவின் இரு அணியும் ஒன்றாக இணையும் போது கட்சி தலைமயில் இருந்த சசிகலாவையும் டிடிவியையும் நீக்குவதாக எடப்பாடி உறுதியளித்தார். அதற்கான பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் எனவும் அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 20 பேர் முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்து விட்டு புதுச்சேரி ரிசார்ட்டுக்கு சென்று விட்டனர்.
மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. உட்கட்சி விவகாரத்தில் நான் தலையிட முடியாது என திமுக கூட்டணிகளிடம் கூறியுள்ளார்.
இதனால் டிடிவி குரூப் நேராக கர்நாடகா சென்று அங்கு குடகில் உள்ள ரிசார்ட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி இன்று பொதுக்குழுவையும் செயற்குழுவையும் கூட்டி டிடிவி தினகரனையும் சசிகலாவையும் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டனர் எடப்பாடி தரப்பு.
இதைதொடர்ந்து குடகு பகுதியில் தனியார் விடுதியில் தங்கியுள்ள 18 பேரிடமும் தமிழக போலீசார் சுய விருப்பத்தின் பேரில் தங்கியுள்ளார்களா என கோவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, அதிருப்தி காரணமாக ஒரு எம்.எல்.ஏ எடப்பாடி அணிக்கு மாறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.