
ஒரு வேளை ஆட்சி கவிழ்க்கப்பட்டால் மீண்டும் வெற்றி பெற்று வருவோம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசை தினகரனால் கவிழ்க்க முடியாது என்றும் ஆறுகுட்டி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது.
அதில், இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக என்ற கட்சிப் பெயரையும் தேர்தல் ஆணையத்தில் இருந்து மீட்பது, பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் ரத்து, டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஆறுகுட்டி எம்.எல்.ஏ , பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளால் வரும் காலங்களில் அதிமுக சிறப்பாக செயல்படும் எனவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை தினகரனால் கவிழ்க்க முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும், ஒருவேளை ஆட்சி கவிழ்க்கப்பட்டால் மீண்டும் வென்று வருவோம் எனவும் குறிப்பிட்டார்.