டிடிவி எம்.எல்.ஏக்களை ரவுண்டு அப் செய்தது தமிழக போலீஸ் - அதிகாரத்தை கையில் எடுக்கிறது எடப்பாடி அரசு...!

Asianet News Tamil  
Published : Sep 12, 2017, 03:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
டிடிவி எம்.எல்.ஏக்களை ரவுண்டு அப் செய்தது தமிழக போலீஸ் - அதிகாரத்தை கையில் எடுக்கிறது எடப்பாடி அரசு...!

சுருக்கம்

tamilnadu police round up to ttv mlas in kudagu karnataka

எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தலைமையில் பொதுக்குழு கூட்டத்தில் டிடிவி தரப்புக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் தமிழக போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். 

ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தபோது விரைவில் பொதுக்குழு கூட்டி சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என எடப்பாடி தரப்பில் அறிவிப்பு வெளியானது. 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டிடிவிக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் எடப்பாடியை நீக்க கோரி ஆளுநரிடம் மனு அளித்தனர். 

இதையடுத்து டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள  விடுதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கியிருந்தனர். 

ஆனால் இதுவரை எவ்வித முடிவும் ஆளுநர் வெளியிடவில்லை. இதனால் டிடிவி எம்.எல்.ஏக்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்கில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ளனர். 

இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பு கூறியபடி பொதுக்குழுவுக்கு தேதி அறிவித்தது. அதனால் ஆத்திரமடைந்த டிடிவி குரூப் நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றத்தில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது எனவும் அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் தெரிவித்தது. 

அதன்படி இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் சசிகலாவுக்கு எதிராகவும் டிடிவிக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்நிலையில், குடகு பகுதியில் தனியார் விடுதியில் தங்கியுள்ள 18 பேரிடமும் தமிழக போலீசார் சுய விருப்பத்தின் பேரில் தங்கியுள்ளார்களா என கோவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

களமிறக்கப்படும் 50000 பெண்கள்... திமுகவின் சீக்ரெட் வேட்டை... கண்ணுக்கு தெரியாமல் மெகா சர்ப்ரைஸ்..!
விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' 10 கேள்விகள்.. அடுத்த விசாரணை எப்போது?