கொத்தாக கூடாரத்தை காலி பண்ணும் தேனி... அலை அலையாக தினாவை நோக்கி வரும் தென்மாவட்டம் !

 
Published : Jan 02, 2018, 07:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
 கொத்தாக கூடாரத்தை காலி பண்ணும் தேனி... அலை அலையாக தினாவை நோக்கி வரும் தென்மாவட்டம் !

சுருக்கம்

theni district will support always for Dinakaran

திமுக தலைவர் கருணாநிதி, மறைந்த முன்னால் முதல்வர்  ஜெயலலிதா என இரு பெரும் ஆளுமைக்குப் பிறகு ஒட்டுமொத்த மீடியாவின் பார்வையையும் தன் பக்கம் இழுத்தது தினகரன் தான். இலை வழக்கில் திஹார் சென்றபோதும் அவரது அரசியல் பெரிதாக பாதிக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. 2G வழக்கு நடந்த சமயத்தில் திமுகவிற்கு சறுக்கல் என சொல்லப்பட்டாலும், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற சமயத்திலும் சரி அவர்களது அரசியல் பயணம் சிறிதும் தடை படவில்லை, குறிப்பாக மீடியாவின் மொத்த கவனத்தையும் தங்களின் மீதே வைத்திருந்தனர். இந்த ஆளுமைகளின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் மீடியாவின் பார்வையை தன்மீது திருப்பிக்கொண்டுள்ளார் தினகரன்.

இதனால் தான் என்னவோ,    தினகரனை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஜெயலலிதாவையே தூக்கிச் சாப்பிடக் கூடிய அளவுக்கு திறமையானவர். முதல் முதாலாக அரசியலில் கால் பதித்த சமயத்தில் எம்பியாக போஸ்டிங் கொடுத்து அனுப்பி வைத்த அதிமுகவினர் தினகரனை இப்போதும் விட்டுக்கொடுக்கவில்லை என்றே சொல்லலாம் அப்படி ஒரு மாஸ் இமேஜய் உருவாக்கி வைத்துள்ளார்.

தேனியில் எம்.பி.யாக போட்டியிட்ட சமயத்தில் என்ன வேலைகளை செய்து வென்றாரோ, அதே டெக்னிக்கை ஆர்.கே.நகரிலும் இம்ப்ளிமென்ட் செய்துள்ளார். தேர்தலை ரத்து செய்து எனது வெற்றியை தடுத்து விடலாம் என நினைக்காதீர்கள். எனது வெற்றி நிரனயிக்கபட்டது அதை யாராலும் தடுக்கமுடியாது என மார்ச் மாதமே தில்லாக சொன்னால் தினகரன்.  

அதை கடந்த மாதம் ஆம் தேதி கண்கூடாக பார்க்க முடிந்தது. தினகரனின் இந்த மேஜிக் தான் பலவருடங்களுக்குப்பின் வொர்க் அவுட் ஆகியுள்ளது. தினகரன் எம்.பி.யாக இருந்த சமயத்தில் அவரின் செயல்பாடுகள் தற்போது அறுவடை செய்ய தொடங்கியுள்ளார். தென் மாவட்ட அதிமுகவினர் பெருமளவில் தினகரன் பக்கம் சாய ஆரம்பித்து விட்டனர்   சாதாரணமாக அல்ல, கிளை, ஒன்றியம், வட்டம் என கொத்துக் கொத்தாக ஒரு மாவட்டமே வரத் தொடங்கியுள்ளனராம்.  தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூடாரத்தை காலி செய்துவிட்டு தற்போது தினகரன் பக்கம் வந்து விட்டனராம்.  அதுமட்டுமல்ல அவர்கள் சொல்லும் காரணம் வியப்பாக இருக்கிறது...

தினகரனை அப்படிக் கொண்டாடுகிறார்கள் தேனிகார அதிமுகவினர்,  அண்ணன் தினகரன்தாங்க சரியான ஆளுமை உள்ள தலைவர், அவரிடம்தான் தலைமைத்துவ குணம் உள்ளது. இவர் மட்டும்தான் அதிமுகவை கட்டுக்கோப்பாக வைக்க முடியும். சிந்தாமல் சிதறாமல் பாதுகாக்க முடியும் என்று சொல்கிறார்கள்.

தினகரன் பற்றிக் கேட்டாலே முகமெல்லாம் அப்படியொரு மலர்ச்சி... என்னதான் என கேட்டால், அவரை மாதிரி ஒரு கேரக்டரை ஜெயலலிதாவிடம் கூட பார்த்ததில்லை அப்படியொரு கெத்து.

#அவர் எம்பியாக இருந்தது முதலே தேனி மாவட்டத்துக்காரர்கள் என்றால் மிகவும் பாசமாக பேசுவார்.  

# இயல்பான தலைவர் அவர்தான், ஏதாவது வேண்டும் என்று போய் நின்றால் எதிர்பார்க்காத அளவுக்கு கவனித்து அனுப்புவார்.  அத்தனை பேரையும் சரியாக நினைவில்வைத்து விசாரிப்பார், பேசுவார்.  
 

#தேனி மாவட்டம் என்றில்லை, இன்று நேற்றல்ல. பல காலமாகவே  தன்னை யார் வந்து எப்போது, சந்தித்தாலும் அவர்களது தேவை அறிந்து உதவுவாராம் தினா.

#தேனி மாவட்டத்தில் பல இடங்களில் அவர் மண்டபங்கள் கட்டி வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.

# அதிமுகவினரையும் தன்னை நாடி வந்தவர்களையும் தினகரன் கவனி்த்து வைத்துள்ளதால் அவர்கள் கொத்தாக தினகரன் பக்கம் தானாம்.

# ஒவ்வொரு நாளும் தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள, அடுத்தடுத்த அதிரடியை தனக்கே உரிய கூலாக பதிலளிக்கும் ஆளுமை உள்ள தினகரன் பக்கம் ஒட்டுமொத்த அதிமுகவும் திரளுமாம். தமிழகமே உற்றுநோக்கும் இடத்தில தான் இருக்கிறார் தினகரன் இனி வரும் காலங்களில் தமிழக அரசியல் தினகரனை வட்டமிட்டே இயங்கும் என அவரது ஆதரவாளர்கள் சிலாகித்து வருகின்றனர்.

குறிப்பு: இது முகநூலில் வந்த ஒரு பதிவு...

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!