பிள்ளையார் சுழி போட்டு தொடங்கிய பெண் MLA! காய் நகர்த்தும் தினா! தயார் நிலையில் ஸ்லீப்பர்செல்ஸ்...

First Published Jan 2, 2018, 6:06 PM IST
Highlights
Dinakaran supporters says Sleeper cells will be out day by day


ஆர்.கே.நகரின் வெற்றிக்குப்பின், தனது அடுத்த இலக்கை நோக்கியிருக்கிறார் தினகரன், கட்சியும் ஆட்சியையும் கைபற்றவேண்டும், நாளுக்கு நாள் தினகரனுக்கு ஆதரவு வலுத்து வருகிறது. திருமங்கலத்துக்கு ஒரு பார்முலாவை அறிமுகபடுத்தினார். இதைதான் கடந்த சில ஆண்டுகளாக பயன் படுத்தி வந்த நிலையில், ஆர்.கே.நகருக்காக திருமங்கலம் பார்முலாவை தூக்கி அடித்துவிட்டார்.

தினகரனின் இந்த துணிச்சல், பலதரப்பட்ட மக்களை கவர்ந்துள்ள நிலையில் தனது சொந்தகட்சியை சேர்ந்த அதிமுக தொண்டர்களுக்கு பிடிக்காமல் போகுமா? ஆதரவுன்னா  ஆதரவு நேரடியாகவே கட்சியை விட்டு நீக்கிப்பார் என தில்லாக சொல்லும் அளவிற்கு கூழ் தினவுக்கு நாளுக்கு நாள் வலுக்கிறது. அதிமுகவிலிருந்து தொடரும் நீக்கதுக்குப்பின் அதிமுகவையும் மெல்ல மெல்ல தன் பக்கம் இழுத்து வருகிறார்.

அதேசமயம், தினகரனை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஜெயலலிதாவையே தூக்கிச் சாப்பிடக் கூடிய அளவுக்கு திறமையானவர் என்று அவரை எம்பியாக பார்த்து ரசித்த தேனி மாவட்ட மக்கள் சிலாகித்துக் கூறுகிறார்கள். குறிப்பாக பன்னீர் ஊர்க்காரர்கள் பன்னீரின் பழசை எகிற விடுமளவிற்கு சப்போர்ட்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா சிறைக்குப் போன பின்னர் தினகரன் கைப்பற்ற நினைத்தார். ஆனால் கைகூடவில்லை. என்னதான் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என இருந்தாலும் பேஸ்மென்ட் இல்லாத கட்டிடம் போல எந்த நேரத்தில் இடிந்து விழும் என யூக்கிக்க முடியாத நிலையில் தான் உள்ளது அதிமுகவின் நிலை, அதன் தலைமைப் பொறுப்பு  இன்னும் யாருக்கும் நிரந்தரமாக கிடைக்கவில்லை.

என்னதான் அதிரடியான ஆஃபர் என வாரி வழங்கினாலும், இது ஏழைகளுக்காக ஆட்சி மக்களுக்கான ஆட்சி என சொல்லியிருந்தாலும் தனக்கு அடுத்து யார் இருக்கப்போகிறார் என்ற நிலையை உருவாக்கவில்லை. அப்படி உருவாக்கத்தான் விளைவு இப்போது நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது.  

தினகரனுக்கு எதிராக செயல்படும் ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் அதிமுகவை கையில் வைத்திருந்தாலும், இவர்களின் பேச்சும் நடவடிக்கையும் விரைவில் தினகரன் தினகரனுக்கு தாரை வார்த்து கொடுத்து விடுவார்கள் என  அதிமுகவினரே பேச ஆரம்பித்துள்ளனர்.

தினகரனை ஒதுக்க ஆரம்பித்ததிலிருந்து தனக்கு ஆதராவ உள்ளவர்கள் எடப்பாடி அணியில் ஸ்லீப்பர் செல்களாக இருந்து வருகிறார்கள். எப்போது தேவைப்படுகிறதோ அப்போது வெளியில் வருவார்கள் என சொல்லிவந்தார். அவர் சொல்லிவந்தது கிட்டத்தட்ட தேர்தல் முடிவு வெளியாகும் ஒவ்வொரு சுற்று முடிவிலும் தெரிந்தது யார் யார் ஸ்லீப்பர் செல்ஸ் என்று ஜெயலலிதா வெற்றிபெற்ற தொகுதி, மக்களுக்கு நன்றாக தெரிந்த இரட்டை இலை என ஒட்டுமொத்தமாக மறக்கடித்து 33 வது இடத்தில இருக்கும் குக்கர் பட்டன் தேயும் அளவிற்கு குத்தியது தெரிந்தது.

இப்படி ஒரு அடியை திமுகவும் அதிமுகவும் வாங்கியதே இல்லை என சொல்லலாம். காரணம் அலட்சியம் வெறும் சுயேச்சை தானே என நினைத்தது, இன்று சட்டசபையை நோக்கி வரப்போகிறது. ஆட்சியையும் கட்சியையும் கைபற்றப்போகிறது என சொல்லிவருகிறார்கள் தினகரனின் ஆதரவாளர்கள்.

வரும் 8ம் தேதி சட்டசபை கூட உள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் சென்றுவிடாமல் தடுக்கும் வகையில், நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணராயபுரம் தொகுதி MLA கீதா தினகரனை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் சந்திக்க உள்ளதால். அதிமுக வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமயத்தில் ஸ்லீப்பர் செல்ஸ் விழித்துக் கொள்வார்கள் என தின சொன்னது இது தானோ என புலம்பி வருகின்றனர்.

click me!