ஆர்.பி.உதயகுமார்... ஆண்மகனா இருந்தா ஓபிஎஸ் வீட்டை தொட்டுப்பார்...! துள்ளி குதிக்கும் சையது கான்

By Ajmal Khan  |  First Published Jul 28, 2022, 4:05 PM IST

ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆக இருந்தபோது கட்சியும் ஆட்சியும்  ஒருவரிடமே இருக்க வேண்டும் என சசிகலாவை பொதுச் செயலாளராக முன்மொழிந்த ஆர்.பி.உதயகுமார் தான் அதன் பிறகு சசிகலாவுக்கே துரோகம் செய்தார் என தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் குற்றம்சாட்டியுள்ளார்.
 


 

ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை நீக்கியும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பு எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்கியும் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.எம் சையது கான் தலைமையில் தேனியில் உள்ள தனியார் விடுதியில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  அப்போது செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.எம் சையது கான்,  மின் கட்டண உயர்வை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக ஆர்.பி.உதயகுமார்  கூறுகிறார். ஆனால்  ஓ. பன்னீர் செல்வத்தை திட்டுவதற்காகவே நடத்தப்பட்ட கூட்டமாகவே இருந்ததாக தெரிவித்தார். அந்த கூட்டத்தில்  6000 பேர் 7000 பேர் எல்லாம் வரவில்லை வெறும் 2500 பேர் மட்டுமே வந்தனர். அதுவும் ஆறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டனர் என விமர்சித்தார்.

Tap to resize

Latest Videos

ஓபிஎஸ் மனு மீதான விசாரணை வேறு தேதிக்கு மாற்றம்.. சைடுகேப்பில் அதிரடி முடிவு எடுத்த இபிஎஸ்.!

ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆக இருந்தபோது கட்சியும் ஆட்சியும், கட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என சசிகலாவை பொதுச் செயலாளராக முன்மொழிந்த ஆர்.பி.உதயகுமார் தான் அதன் பிறகு சசிகலாவுக்கே  துரோகம் செய்தார். அதேபோல தன்னை முதலமைச்சராகிய சசிகலாவிற்கு எடப்பாடி பழனிச்சாமி துரோகம் செய்து அவரை கட்சியை விட்டு நீக்கினார். அவர்கள் இருவரும் தான் துரோகிகள் ஓ பன்னீர்செல்வம் அல்ல என தெரிவித்தார். தேனி மாவட்டத்தில்  16 ஒன்றிய செயலாளர்களின் 13 பேர் எங்களிடம் இருக்கிறார்கள் 9 நகர செயலாளர்களின் ஏழு பேர் எங்களிடம் இருக்கிறார்கள் நான்கு பொதுக்குழு உறுப்பினர்களில் மூன்று பேர் எங்களிடம் இருக்கிறார்கள் என சையது கான் தெரிவித்தார். 

ஓபிஎஸ் தரப்பு எடுத்த அதிரடி முடிவு.. சிக்கலில் ஆர்.பி உதயகுமார் - அப்செட்டில் எடப்பாடி !

ஓ பன்னீர்செல்வத்தின் வீட்டை சூறையாடுவோம் என்று ஆர். பி உதயகுமார் சொல்கிறார் அவரது அப்பன் வந்தாலும் அது முடியாது அவர் உண்மையிலேயே வேட்டி கட்டிய ஆண்மகன் என்றால் ஓபிஎஸ் வீட்டை வந்து தொட்டுப் பார்க்கட்டும் என சவால் விடுத்தார். ரவீந்திரநாத் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டுமானால் ஆர். பி உதயகுமார் உள்ளிட்ட கட்சி ஒன்றாக இருக்கும் போது வெற்றி பெற்ற அனைவருமே தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் வெற்றி பெற்று தங்களது செல்வாக்கை நிரூபித்து காட்டட்டும் என கூறினார். 

இதையும் படியுங்கள்

முன்னாள் அமைச்சர்கள் உட்பட 7 பேர் அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்.. அசராமல் திருப்பி அடிக்கும் ஓபிஎஸ்.!

 

click me!