சசிகலா,தினகரனுடன் இணைந்து செயல்படுமாறு கூறினாரா ஓபிஎஸ்..? திடீர் விளக்கம் அளித்த தேனி மாவட்ட செயலாளர்

By Ajmal KhanFirst Published Aug 7, 2022, 2:52 PM IST
Highlights


 அதிமுகவில் ஓபிஎஸ்- இபிஎஸ் என  பிளவுபட்ட நிலையில், சசிகலா, தினகரனோடு இனைந்து செயல்படுமாறு தனது ஆதரவாளர்களுக்கு  ஓ.பன்னீர் செல்வம் கூறியதாக தகவல் வெளியான தகவலுக்கு ஓபிஎஸ் ஆதரவாளரும் தேனி மாவட்ட செயலாளருமான சையது கான் விளக்கம் அளித்துள்ளார்.

சசிகலாவுடன் இனைந்து பணியாற்றுங்கள்..?

அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு அணிகளாக பிளவு பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அதிமுக சட்ட விதிகளை மீறியதாக கூறி அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். ஆனால் ஓபிஎஸ் தரப்போ தன்னை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லையென கூறியது. தொடர்ந்து அதிமுகவில் இருந்து இபிஎஸ், கே.பி, முனுசாமி உள்ளிட்டவர்களை நீக்கியும் ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து புதிய மாவட்ட செயலாளர்களை ஓபிஎஸ் நியமித்தும் வருகிறார்.

விளக்கம் அளித்த சையது கான்

இந்தநிலையில் அதிமுக முன்னாள் அவைத்தலைவர் மதுசூதனன் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓ பன்னீர்செல்வம்  மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து  நிர்வாகிகளிடம் பேசியபோது சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் டிடிவி தினகரன் கட்சியினருடன் அதிமுகவினர் இணைந்து  செயலாற்ற வேண்டுமென ஓபிஎஸ் உத்தரவிட்டதாக செய்தி வெளியானது. இதன் காரணமாக தேனி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த தகவல் தொடர்பாக விளக்கம் அளித்த ஓபிஎஸ் ஆதரவாளரும், தேனி மாவட்ட செயலாளருமான சையது கான், சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் டிடிவி தினகரன் கட்சியினருடன் அதிமுகவினர் இணைந்து  செயலாற்ற வேண்டுமென ஓபிஎஸ் எந்தவித உத்தரவும் வெளியிடவில்லையென கூறினார்.

எடப்பாடி பழனிசாமி- ஸ்டாலின் ரகசிய கூட்டு...! இபிஎஸ் அணியினரை அலற விடும் அதிமுக முன்னாள் எம்.பி

ஓபிஎஸ் உத்தரவிடவில்லை

இது போன்ற தவறான செய்தி பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவு என்ற வார்த்தையை ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் பயன்படுத்தவில்லை என கூறினார். மேலும் எங்களை போன்ற கட்சி காரர்கள் தினகரனை வரவேற்ப்போம் என கூறினோம். ஆனால் ஓபிஎஸ் ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கமான அதிமுகவின் தலைராக ஓபிஎஸ் உள்ளார். அவர் தெரிவிக்காததை கூறியதாக வெளியான தகவல் முற்றிலும் தவறு என குறிப்பிட்டார். கட்சியினர் மனதில் இருப்பது வேறு ஆனால் ஓபிஎஸ் கூறினால் அது கட்சியின் சட்ட திட்டமாக ஆகிவிடும் என சையது கான் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

இபிஎஸ்க்கு அதிர்ச்சி அளித்த பொதுக்குழு உறுப்பினர்கள்...! ஓபிஎஸ்யை திடீரென சந்தித்து ஆலோசித்ததால் பரபரப்பு

click me!