
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குல தெய்வ கோயில் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே நசியனூரில் உள்ளது.
கோவை நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள இந்த கோயில் பிரபலமானதாகும். இந்த நிலையில், இன்று காலை கோயிலுக்குக் சென்ற பூசாரி, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், கோயிலினுள்ளே சென்றபோது, உள்ளே வைக்கப்பட்டிருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த தங்கம், வெள்ளி மற்றும் ஒரு லட்சம் ரூபாய் தங்கம், வெள்ளி மற்றும் ஒரு லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கோயிலுக்கு இரவு நேர காவலாளி இல்லை என்றும் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.