வேறு கட்சிக்கு தவிய இளம் தலைவர்... கதறும் கட்சியின் பொதுச்செயலாளர்..!

By Thiraviaraj RMFirst Published Sep 28, 2021, 6:13 PM IST
Highlights

காங்கிரசை காப்பாற்றாமல் நாட்டை காப்பாற்ற முடியாது" என்று கோடிக்கணக்கான இளைஞர்கள் உணர்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

சுரண்டல் இல்லாத புதிய சமுதாயத்தை படைக்க போராடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பிடித்திருந்தால் அவர் நிச்சயம் வெளியே சென்று இருக்க மாட்டார் என கன்னையா குமார் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகியது குறித்து சி.பி.ஐ. பொதுச்செயலாளர் டி.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

2025 பீகார் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அதற்கு முதல் கட்ட நடவடிக்கையாக  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் இளம் தலைவருமான கன்னையா குமாரை காங்கிரசில் இணைத்துக் கொண்டுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’காங்கிரஸ் கட்சி ஒரு பெரிய கப்பல் போன்றது. அது காப்பாற்றப்பட்டால், பலரின் அபிலாஷைகள், மகாத்மா காந்தியின் ஒற்றுமை, பகத் சிங்கின் தைரியம், மற்றும் அம்பேத்கரின் சமத்துவம் பற்றிய யோசனையும் பாதுகாக்கப்படும். இதனால்தான் நான் காங்கிரஸில் சேர்ந்தேன். காங்கிரசை காப்பாற்றாமல் நாட்டை காப்பாற்ற முடியாது" என்று கோடிக்கணக்கான இளைஞர்கள் உணர்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

பீகார் அரசியலில் கன்னையா குமார் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கன்னையா குமாருடன், குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானியும்,காங்கிரசில் இணைகிறார். கடந்த காலங்களில் ஜோதிராதித்யா சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா மற்றும் பிரியங்கா சதுர்வேதி போன்ற பல இளம் தலைவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறினர். கடந்த பீகார் சட்டசபை தேர்தலில்  காங்கிரஸ் போட்டியிட்ட 70 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், பொதுச்செயலாளருமான டிராஜா, '’சுரண்டல் இல்லாத புதிய சமுதாயத்தை படைக்க போராடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பிடித்திருந்தால் அவர் நிச்சயம் வெளியே சென்று இருக்க மாட்டார்’’என கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!