ராகுல் காந்திக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சித்து. தலைவர் பதவியை தூக்கி எறிந்து அதகளம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 28, 2021, 5:07 PM IST
Highlights

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தேசிய தலைமை மீது அதிருப்தியில் இருந்து வரும் கேப்டன் அமரிந்தேர் சிங் இன்று டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவர் பாஜக தலைமையை சந்தித்து பாஜகவில் சேர வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன.

மிகுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில்  பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற நவ்ஜோத் சிங் சித்து திடீரென தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, தலைவர் பதவியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்றுவேன் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருந்த கேப்டன் அமரிந்தேர் சிங்குக்கும், அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்து பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கட்சியில் அதிகார மோதல் இருந்து வந்தது. நாளடைவில் அது வார்த்தை போராகவும் மாறியது. அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமரிந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர். இதில் அதிர்ச்சி அடைந்த அமரிந்தர் சிங், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து சித்துவின் ஆதரவாளரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவருமான சரண்ஜித் சிங் பஞ்சப் மாநில முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

சரண்ஜித் சிங் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பஞ்சாப் மாநில வரலாற்றில் முதல்முறையாக ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதை பலரும் பாராட்டி வரவேற்கின்றனர். குறிப்பாக ராகுல் காந்தியை வெகுவாக பாராட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கின் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே, காங்கிரஸ் கட்சித் தலைமையையும், நவ்ஜோத் சிங் சித்து வையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ராகுல் காந்திக்கும் பிரியங்கா காந்திக்கு அரசியல் அனுபவமும் இல்லை என்றும் வெளிப்படையாகவே கேப்டன் அமரிந்தர் சிங் விமர்சித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தேசிய தலைமை மீது அதிருப்தியில் இருந்து வரும் கேப்டன் அமரிந்தேர் சிங் இன்று டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவர் பாஜக தலைமையை சந்தித்து பாஜகவில் சேர வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன.

இந்நிலையில் தலைவர் பதவியை ஏற்றது முதல் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வந்த நவ்ஜோத் சிங் சித்து திடீர் திருப்பமாக தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுப்பி வைத்தார், தனிமனிதனுக்கு எதிராக நடத்தப்படும் தாக்கதலை ஏற்றுக்கொள்லாமே தவிர பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதை ஒரு காலம் ஏற்க முடியாது, அதனால் காங்கிரஸ்  கட்சியின் மாநில தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்கிறேன், ஆனாலும் காங்கிரஸ் கட்சிக்கான எனது பணி தொடரும் என அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது சித்து ஆதரவாவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

click me!