அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சிக்கல்... நாளை மறுநாள் என்ன நடக்கும்..?

Published : Sep 28, 2021, 04:14 PM IST
அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சிக்கல்... நாளை மறுநாள்  என்ன நடக்கும்..?

சுருக்கம்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் 30ம் தேதி விசாரணைக்கு ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.   

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் 30ம் தேதி விசாரணைக்கு ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

ஆலந்தூர் அலுவலகத்தில் ஆஜராக எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஜூலை 22-ம் தேதி கரூர் உட்பட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் சுமார் 20 இடங்களிலும், சென்னையில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!