திடீர் பரபரப்பு... திமுக எம்.பி., தனது பதவியை ராஜினாமா செய்கிறார்..? மு.க.ஸ்டாலின் அழுத்தம்..?

By Thiraviaraj RMFirst Published Sep 28, 2021, 3:44 PM IST
Highlights

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இந்த வழக்கில் மிகுந்த அக்கறை எடுத்து வருவதாலும், அரசியல் ரீதியாகவும் திமுகவிற்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

கடலூர் தொகுதி திமுக திமுக எம்.பி., ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். 
இந்த நிலையில் திமுக எம்.பி., ரமேஷ் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் திமுக எம்.பி., ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் அவரது ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். அதனை சந்தேக மரணம் என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

தொழிலாளி கோவிந்தராஜன் மகன் செந்தில் என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து செய்யப்பட்டுள்ளது. கடலூர் தொகுதி எம்.பி.ரமேஷ், அந்த தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த பேர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக எம்.பி., ரமேஷ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதால், அவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். 

இந்நிலையில் திமுக தலைமை, ரமேஷிடம் அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக எம்.பி., ரமேஷ் தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனாலும் விசாரணையை எதிர்கொள்ளும் வகையிலும், வெளிப்படையாக நடக்க வேண்டும் என்பதாலும் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

 இந்த வழக்கில் இந்த கோவிந்தராஜன் குடும்பத்தினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இந்த வழக்கில் மிகுந்த அக்கறை எடுத்து வருவதாலும், அரசியல் ரீதியாகவும் திமுகவிற்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் ரமேஷ் விரைவில் தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. 

click me!