தமிழக அமைச்சரின் தலையில் விழுந்த இடி.. சோகத்தில் மூழ்கிய திமுக.. சி.வெ. கணேசன் மனைவி மரணம்.

By Ezhilarasan Babu  |  First Published Dec 9, 2021, 10:52 AM IST

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் மனைவி பவானியம்மாள் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது (55) உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 


தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் மனைவி பவானியம்மாள் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது (55) உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இது திமுக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் (57) இவர் 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு (தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு) அமைச்சசராக பதவியேற்றார். இவர் கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்து வருகிறார். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் அமைச்சர் சி.வி கணேசன் அவர்களின் மனைவி பவானி அம்மாள் (55) சற்று முன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். விருதாச்சலத்தில் உள்ள அமைச்சர் இல்லத்தில் வசித்து வந்த அவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பவானி அம்மாளின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடித்து அவரது உடல் வீட்டிற்கு கொண்டவரப்பட்டுள்ளது. அமைச்சரின் மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் திமுக தொண்டர்கைள அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அவ் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் சிறப்பாக செயலாற்றி வருகிறார். ஸ்டாலினுக்கு நிகராக அமைச்சர்களும் சுற்றி சூழ்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருவதை மக்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தொழிலாளர்கள் கோரிக்கைகளை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கே சென்று அமைச்சர் கோரிக்கை மனுவை  பெற்று பலரின் கவனத்தையும் ஈர்த்தார். அதாவது சமீபத்தில் தமிழ்நாடு தொழிலாளர் பிரச்சினை குறித்து ஏஐடியுசி தலைவர்கள் அமைச்சரை சந்தித்து முறையீடு செய்வதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் அவர்களிடம் கேட்டபோது.

அமைச்சர் நீங்கள் எதற்கு வருகிறீர்கள், நானே நேரடியாக வருகிறேன் என்று கூறி ஒரு மணிநேரத்திற்குள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்ற கோரிக்கை மனுவை ஏற்றார். அமைச்சரின் இந்த நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி அர்ப்பணிப்புடன் செயலாற்றக் கூடிய அமைச்சரின் மனைவி உயிரிழந்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் அமைச்சரின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

click me!