DMK vs BJP | நாங்க பெற்ற பிள்ளைக்கு முத்துவேல் கருணாநிதி என பெயர் வைப்பதா.? திமுக அரசை வெளுத்துக்கட்டிய பாஜக.!

By Asianet TamilFirst Published Dec 9, 2021, 9:34 AM IST
Highlights

முத்துவேல் கருணாநிதி வணிக வளாகம் என பெயர் மாற்றி இருந்தார்கள். பாஜகவின் கடும் எதிர்ப்பால் மீண்டும் மத்திய அரசின் திட்டத்துக்கு பழைய பெயரை (தஞ்சாவூர் மாநகராட்சி வணிக வளாகம்) என வைத்தார்கள்.

பிரதமர் புகைப்படத்தை போடாமல் ஒரு புறம் கருணாநிதியின் புகைப்படத்ஹைப் போடுகிறார்கள். இன்னொரு முதல்வர் ஸ்டாலின்  புகைப்படமும் இருப்பது கண்டிக்கத்தக்கது. இது தொடரும்பட்சத்தில் பாஜக சார்பில் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று தமிழக பாஜக துணை தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசின் திட்டத்தை தமிழக அரசு தன்னுடைய திட்டம் போல காட்டிக்கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. பிரதமர் புகைப்படத்தை போடாமல் ஒரு புறம் கருணாநிதியின் புகைப்படத்ஹைப் போடுகிறார்கள். இன்னொரு முதல்வர் ஸ்டாலின்  புகைப்படமும் இருப்பது கண்டிக்கத்தக்கது. இது தொடரும்பட்சத்தில் பாஜக சார்பில் பெரும் போராட்டம் வெடிக்கும். தடுப்பூசி முகாம்களில் ஒரு புறம் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். வேண்டுமென்றால், தமிழக அரசின் சார்பாக உங்களது மகன் உதயநிதி படத்தை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் திட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடியை புறக்கணிப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. 

டெல்டா மாவட்டங்களில் சம்பா தாளடி பயிர்களுக்கு, அதுவும் முற்றிலுமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடுபொருள் மானியம் வழங்குவது கேலிக்கூத்து. விவசாயிகள் இனிமேல் இடுபொருட்களான விதைகள், பூச்சிக்கொல்லிகள் வாங்கி, அதை நடவு செய்வது எல்லாம் இயலாத காரியம். மழை, வெள்ளித்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கேட்கக்கூடிய நிவாரணத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு பெற்ற பிள்ளைதான் ஸ்மார்ட் சிட்டி. இத்திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் நன்றாக வளர்க்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். 

தற்போது திமுக ஆட்சியில் அந்தத் திட்டத்துக்கு மாநில அரசு உரிமை கொண்டாடுவது போல தஞ்சாவூரில் நேற்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. முத்துவேல் கருணாநிதி வணிக வளாகம் என பெயர் மாற்றி இருந்தார்கள். பாஜகவின் கடும் எதிர்ப்பால் மீண்டும் மத்திய அரசின் திட்டத்துக்கு பழைய பெயரை (தஞ்சாவூர் மாநகராட்சி வணிக வளாகம்) என வைத்தார்கள். இதுபோல திமுக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.  இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடு என்பது பாரபட்சம் இல்லாமல் இருக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது பாரபட்சம் காட்டக் கூடாது. உலப் பாரம்பரிய புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை புனரமைக்க மாநில அரசு மத்திய அரசுடன் இணைந்து கொள்ள வேண்டும்” என்று கருப்பு முருகானந்தம் தெரிவித்தார். 

click me!