#BREAKING எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீச்சு.. அமமுக நிர்வாகி அதிரடி கைது..!

Published : Dec 09, 2021, 08:00 AM IST
#BREAKING எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீச்சு.. அமமுக நிர்வாகி அதிரடி கைது..!

சுருக்கம்

எதிர்கட்சித் தலைவரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வாகனம் மீது செருப்பு வீசி தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீசிய அமமுக பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் கடந்த டிசம்பர் 5ம் தேதி அனுசரிக்கப்பட்டதையொட்டி கடற்கரை சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக மற்றும் அமமுக கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு அஞ்சலி செலுத்த வந்த எதிர்கட்சித் தலைவரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வாகனம் மீது செருப்பு வீசி தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து தாக்குதல் சம்பவத்தை அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தூண்டுதலின் பேரில் அமமுகவினர் நடத்தியதாக குற்றஞ்சாட்டி அதிமுக கட்சியைச் சேர்ந்த  சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியை சேர்ந்த மாறன் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அமமுகவினர் 50 மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வந்தனர். 

இதனிடையே, உட்கட்சி பூசல் காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதலை திசை திருப்ப அமமுகவினர் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளதாக டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீசிய அமமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணி அமமுக நிர்வாகி மாரிமுத்துவிடம் அண்ணா சதுக்கம் போலீசார் தீவர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!