TTV Dhinakaran: ஆஹா மீண்டும் முதல்ல இருந்தா.. ஸ்லீப்பர் செல்கள் உரிய நேரத்தில் வெளியே வருவார்கள்.. டிடிவி.!

Published : Dec 09, 2021, 06:54 AM IST
TTV Dhinakaran: ஆஹா மீண்டும் முதல்ல இருந்தா.. ஸ்லீப்பர் செல்கள் உரிய நேரத்தில் வெளியே வருவார்கள்.. டிடிவி.!

சுருக்கம்

நீங்களே தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் குண்டர்களை வைத்து தொண்டர்களை விருப்ப மனு கொடுக்க வந்த போது விரட்டியதை நான் தூண்டிவிட்டு அவர்களை அங்கு அனுப்பியதாக சிலர் புகார் கூறி இந்தப் பிரச்சனையை  திசை திருப்பும் நோக்கில் போராட்டங்களை அறிவித்துள்ளனர். 

உட்கட்சி பூசல் மற்றும் கூச்சலை சரி செய்யவே அதிமுக நிர்வாகிகளுக்கு நேரம் சரியாக உள்ளது. இதில் அவர்கள் எங்கு எதிர்க்கட்சியாக செயல்படுவது என டிடிவி. தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அவரது மனைவி அனுராதா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;- அதிமுகவில் நடைபெறும் நிகழ்வுகள் கேலிக் கூத்தாக உள்ளன. அதிமுகவை பொறுத்த வரை குரங்கு கையில் கிடைத்த பூ மாலை என்கிற நிலை தான். நீங்களே தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் குண்டர்களை வைத்து தொண்டர்களை விருப்ப மனு கொடுக்க வந்த போது விரட்டியதை நான் தூண்டிவிட்டு அவர்களை அங்கு அனுப்பியதாக சிலர் புகார் கூறி இந்தப் பிரச்சனையை  திசை திருப்பும் நோக்கில் போராட்டங்களை அறிவித்துள்ளனர். 

உட்கட்சி பூசல் மற்றும் கூச்சலை சரி செய்யவே அதிமுக நிர்வாகிகளுக்கு நேரம் சரியாக உள்ளது. இதில் அவர்கள் எங்கு எதிர்க்கட்சியாக செயல்படுவது என்றார்.எனக்கும் சசிகலாவுக்கும் கருத்து வேறுபாடு, மன வருத்தம் உள்ளதாக வரும் கருத்துகளுக்கு பதில் கூற விரும்பவில்லை. சசிகலா தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று உரிமை கோருவது தொடர்பாக நாங்கள் கருத்து கூற முடியாது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக நிச்சயம் போட்டியிடும். மக்கள் எங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

நீட் தேர்வு விவகாரம், ஏழு தமிழர் விடுதலை போன்றவற்றில் தேர்தலுக்கு முன் திமுக பேசியதும், ஆட்சியில் அமர்ந்த பிறகு நடந்திருப்பது என்ன என்றும் அனைவருக்கும் தெரியும். திமுகவின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை இயக்குவது யார் என்பதை காலம் உணர்த்தும்.

அதிமுகவை மீட்டு நல்லாட்சி தருவதே எங்கள் இலக்கு. அதை நோக்கி நாங்கள் சென்று கொண்டுள்ளோம். வெற்றி- தோல்வியைக் கண்டு அஞ்சும் தொண்டர்கள் அமமுகவில் இல்லை. தொடர்ந்து போராடி எங்கள் இலக்கை நிச்சயம் பெறுவோம். அதிமுகவில் உள்ள ஸ்லீப்பர் செல்கள் உரிய நேரத்தில் வெளியே வருவார்கள் என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். முன்னதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அமமுகவை தொடங்கியதில் இருந்து  ஸ்லீப்பர் செல்கள் உரிய நேரத்தில் வெளியே வருவார்கள் என தொடர்ந்து கூறிவருகிறார். இவர் கட்சி தொடங்கி 3 வருடங்கள் ஆகிறது இதுவரை அந்த ஸ்லீப்பர் செல்கள் யாரென்றே தெரியவில்லை. அப்படி சில இருக்கிறார்களே என்றும் தெரியவில்லை. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?