
சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்று வரும் ஆர்.கே.நகர் தொகுதி ஓட்டு எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஒட்டு எண்ணிக்கை எதாடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆர்.கே.நகர் தொகுதி ஓட்டு எண்ணும் பணி சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று மற்றும் இரண்டாவது சுற்றுகளில் டிடிவி தினகரன் முன்னிலை பெற்றிருந்தார்.
இதன் காரணமாக டிடிவி தினகரன் மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் இடயே மோதல் ஏற்பட்டது. மேஜைகள் உடைக்கப்பட்டன. தேர்தல் அலுவலகர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. வாக்கு மையயத்துக்குள் அதிக அளவில் போலீசார் சென்றுள்ளதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் துணை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்பினரையும், தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும், மோதல் அதிகமாகி போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலில் காயமடைந்த வேட்பாளர்களின் ஏஜென்டுகள் காயங்களுடன் வெளியேறினர். அதிமுக பெண் ஏஜென்ட் உட்பட 4 பேர் வெளியேற்றப்பட்டனர். இதனை அடுத்து ஓட்டு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஓட்டு எண்ணிக்கை துவங்கி நடைபெற்று வருகிறது.