விருகம்பாக்கம் தொகுதியில் வெற்றி அதிமுகவுக்கு உறுதியாகி விட்டது.. அடித்து தூள்கிளப்பும் விருகை ரவி..

By Ezhilarasan BabuFirst Published Mar 15, 2021, 5:51 PM IST
Highlights

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் விருகம்பாக்கம் தொகுதி முதல் தொகுதியாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை என விருகை ரவி கூறியுள்ளார். சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.என் ரவி இன்று வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.  

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் விருகம்பாக்கம் தொகுதி முதல் தொகுதியாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை என விருகை ரவி கூறியுள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.என் ரவி இன்று வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர். விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு நானும் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்தவர்களும் சேர்ந்து மனு தாக்கல் செய்தோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் நிற்பது போலவே இந்த முறையும் கூடுதலாக சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. கடந்த முறை அதிமுக தனித்து நின்று வெற்றி பெற்ற தொகுதி இது. இந்த முறையில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்கிறது. 

வெற்றி வாய்ப்பு அதிமுகவிற்கு தான். குறிப்பாக கடந்த 4 ஆண்டு காலங்களில் தமிழக முதலமைச்சர் தமிழகத்திற்கு பல சாதனைகளை செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் செல்லுமிடமெல்லாம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அடுத்த முறையும் அதிமுக தான் வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் விருகம்பாக்கம் தொகுதி முதல் தொகுதியாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. 

கடந்த 4 ஆண்டுகளில் இந்த பகுதி மக்களுக்கு என்ன தேவையோ அதை மனுவாக பெற்று முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்று நிறைவேற்றியுள்ளோம். அதேபோன்று மழைக்காலங்களில் தண்ணீர் நிற்கும், தற்போது மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்சினை இந்த பகுதியில் இல்லை, அதேபோன்று அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்கள். அதையும் இந்த தேர்தல் முடிந்தவுடன் ஆறு மாத காலத்திற்குள் முடித்து வைக்கப்படும் என்றார். 

 

click me!